அடிச்சான் பாரு iQOO.. 7000mAh பேட்டரி உடன் புது Mini போன்.. இது பல பேர் கையில தவழ போகுது!
எல்லோரும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் வில்லன் ஆன ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நேரத்தல் "இது செம்ம டிவிஸ்ட்-ஆ இருக்கே!" என்று கூறும்படியாக ஐக்யூ 15 சீரீஸின் கீழ் ஒரு மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
அது ஐக்யூ 15 மினி (iQOO 15 Mini) ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது ஐக்யூ 15 சீரீஸின் கீழ் ஐக்யூ 15 , ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) மற்றும் ஐக்யூ 15 மினி என மொத்தம் 3 மாடல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐக்யூ 15 ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது உலகளாவிய வெளியீட்டின் விளிம்பில் உள்ளது.

மற்ற இரண்டு மாடல்களும் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உள்நாட்டு சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஐக்யூவின் இந்த மினி மாடல் இந்திய சந்தைக்கும் வரும். ஏனென்றால் ஒன்பிளஸ் அதன் மினி / காம்பெக்ட் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 13எஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல ஒன்பிளஸ் 15 சீரீஸின் கீழும் நிச்சயம் ஒன்பிளஸ் 15எஸ் அறிமுகமாகும். அதற்கு போட்டியாக ஐக்யூ 15 மினி வரும்.
ஐக்யூ 15 மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 6.31-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது டைமன்சிட்டி 9500 பிளஸ் சிப்செட்டை பேக் செய்யலாம். முன்னதாக வந்த ஒரு லீக், இது பெரிய 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று பரிந்துரைக்கிறது. விலையை பொறுத்தவரை ரூ.59,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சீனாவில் அறிமுகமான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை என்ன? 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை என்ன? சீனாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.65,000 - ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் Samsung M14 AMOLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7,000mAh பேட்டரி
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 24மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- 7300mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








