2026 இல் வரும் 4 மினி ஸ்மார்ட்போன்கள்.. மொபைல் மார்க்கெட் பத்திக்கிட்டு எரிய போகுது.. iQOO பின் வாங்கியது!
ஒன்பிளஸ் மற்றும் ஐக்யூ நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் விரிசல் விழுந்துள்ளது. ஒன்பிளஸ் 13 க்கு போட்டியாக ஐக்யூ 13, ஒன்பிளஸ் 15 க்கு போட்டியாக ஐக்யூ 15 அறிமுகம் செய்து - ஐக்யூ நிறுவனமானது ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது.
இதேபோல ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த மினி (காம்பாக்ட்) ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மாடலுக்கு போட்டியாக ஐக்யூ 15 மினி (iQOO 15 Mini) மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது; குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகின.

இதோடு ஹானர் மேஜிக் 8 ஸ்லிம் / மினி (Honor Magic 8 Slim / Mini), விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s), ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9ஸ் (Oppo Find X9s) ஆகிய ஸ்மார்ட்போன்களின் அந்தந்த நிறுவனங்களின் காம்பாக்ட் ஸ்மார்ட்போன்களாக உருவாகி வருகின்றன. ஒட்டுமொத்தமாக 2026 இல் மினி ஸ்மார்ட்போன் சந்தையானது "திவீரமான போட்டிகளால்" கொழுந்துவிட்டு எரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீரென தற்போது ஐக்யூ 15 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் நம்பகமான டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) வழியாக கிடைத்துள்ளது. இதற்கு பதிலாக ஐக்யூ நிறுவனமானது, சிறந்த கேமராக்கள், வலுவான செயல்திறன் மற்றும் பெரிய பேட்டரிகளை வழங்கும் - மேக்ஸ் "Max" அல்லது பிளஸ் "Plus" பிராண்டிங்கை உருவாக்கலாம் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.
முன்னதாக ஐக்யூ 15 மினி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று ஊகிக்கப்பட்டு இருந்தது. மேலும் இது 6.31-இன்ச் OLED 1.5K டிஸ்பிளே, டைமன்சிட்டி 9500 அல்லது 9500+ சிப், 7000mAh க்கும் அதிகமான பேட்டரி, மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் ஒரு அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருமென்றும் கூறப்பட்டது
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா
- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி
ஐக்யூ 15 போட்டியாளர் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் தேர்ட் ஜெனரேஷன் பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 24 மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50 மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- 7300mAh பேட்டரி
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது. அதன் விலை ரூ.79,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








