Home
Mobile

வேலு வந்துட்டான்.. AnTuTu ஸ்கோரில் டாப் ஆக வந்த iQOO போன்.. OnePlus போன்களை ஓரங்கட்டி சம்பவம்!

அன்டுடு-வின் (AnTuTu) 2026 ஏப்ரல் மாதத்திற்கான சமீபத்திய ஆண்ட்ராய்டு பெர்ஃபார்மென்ஸ் தரவரிசைகள் (AnTuTu's latest Android performance rankings) வெளியாகி உள்ளன. கடந்த மாதம் வெளியான தரவரிசைக்கும், புதிய தரவரிசைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதால்.. ஒன்பிளஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; ஐக்யூ ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

ஏனென்றால் புதிய தரவரிசையிலும் ஒரே ஒரு ஒன்பிளஸ் மாடல் தான் உள்ளது. ஆனால் 2 ஐக்யூ மாடல்கள் உள்ளன. அதாவது ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) மாடல் முதல் இடத்தில் இருக்க அதை தொடர்ந்து ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் உள்ளது. இவ்விரு மாடல்களில் ஐக்யூ 15 இந்திய சந்தையிலும் வாங்க கிடைப்பதால், இந்தியர்களை பொறுத்தவரை இதுதான் பெர்ஃபார்மென்சில் டாப்பு டக்கரு!

வேலு வந்துட்டான்.. AnTuTu ஸ்கோரில் டாப் ஆக வந்த iQOO போன்!

ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 4,126,940 புள்ளிகளுடன் ஏப்ரல் மாதத்தின் சிறந்த செயல்திறன் கொண்ட போனாக விளங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக ஐக்யூ 15 மாடல் 4,102,621 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்பை கொண்டுள்ளன, மேலும் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் உடன், சிறந்த வெப்ப மேலாண்மையுடன் செயல்திறனுக்காக தீவிரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக ரெட் மேஜிக் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4,098,742 புள்ளிகளுடன் உள்ளது. இதுவும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்பை பயன்படுத்துகிறது, ஆனால் 24ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. பரவலாக கவனிக்கத்தக்க விஷயம் சிப்செட் பிரிப்புதான். இந்த மாதத்தின் முதல் பத்து ஆண்ட்ராய்டு போன்களில், ஒன்பது போன்கள் ஸ்னாப்டிராகன் 8 அல்ட்ரா ஜென் 5 சிப்பே உள்ளன

மீடியாடெக்கின் டைமென்சிட்டி 9500-ஐப் பயன்படுத்தும் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) மட்டுமே இதற்கு விதிவிலக்கு, இது தரவரிசையில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த கட்டமைப்பில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அப்போதே ஐக்யூ 15எ அல்ட்ரா ஸ்மார்ட்போன் தான் முதல் இடத்தில் இருந்தது.

மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவிலும் ஐக்யூ தான் டாப்பில் உள்ளது. இந்த பிரிவில் மீடியாடெக் சிப்செட்கள் வலுவான இடத்தை பிடித்துள்ளது. டைமென்சிட்டி 8500 சிப் மூலம் இயங்கும் ஐக்யூ இஸட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போன் ஆனது 2,323,047 புள்ளிகளுடன் இந்த பிரிவில் முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து, டைமென்சிட்டி சிப்களில் இயங்கும் ஹானர் பவர்2 மற்றும் ஒப்போ கே15 ப்ரோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா

- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி
- அமேசானில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ரூ.72,999 முதல் வாங்க கிடைக்கிறது.
- பிளிப்கார்ட்டில் ரூ.68,393 க்கு வாங்க கிடைக்கிறது

Best Mobiles in India

English summary
iQOO 15 Leads in AnTuTu latest Android performance rankings for April 2026 OnePlus in 6th Place
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X