அதிரவிடும் விலை.. இந்தியாவில் அறிமுகமானது புது iQOO போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் அசத்தலான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ஐக்யூ 15 போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 specifications): 6.85-இன்ச் சாம்சங் எம்14 8T எல்டிபிஓ அமோஎல்இடி (Samsung M14 8T LTPO AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ 15 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 3168×1440 பிக்சல்ஸ், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 840 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஸ்மர்ட்போனில் உள்ளது. இதுதவிர Q3 சிப் ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 6.0, டூயல்-பேண்ட் வைஃபை 7 802.11 பிஇ, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் இந்த புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் உள்ளன.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ரூ.72,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பினபு இதன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.79,999-ஆக உள்ளது. நவம்பர் 27-ம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் இந்த போன் வரும் டிசம்பர் 1-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. அமேசான் மற்றும் iQOO.com தளத்தில் இந்த போனை வாங்க முடியும். அதேபோல் இந்த போனுக்கு ரூ.7000 வரை வங்கி சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








