Home
Mobile

அண்ணனுக்கு வழி விடு.. 7000mAh பேட்டரி உடன் புது iQOO போன்.. எந்த மாடல்?

பட்ஜெட் தொடங்கி பிரீமியம், பிளாக்ஷிப் வரையிலாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கு வேட்டு வைக்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நிறுவனமான ஐக்யூ, அதன் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஐக்யூ 15 சீரீஸ் (iQOO 15 Series) ஆகும்.

இந்த சீரீஸின் கீழ் ஐக்யூ 15 (iQOO 15) மற்றும் ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் மீதுதான் எக்கசக்க எதிர்பார்ப்புகள்! ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டை (Snapdragon 8 Elite 2) உடன் அறிமுகமாகும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது!

அண்ணனுக்கு வழி விடு.. 7000mAh பேட்டரி உடன் புது iQOO போன்!

ஐக்யூ 15 எப்போது அறிமுகமாகும்? சீனாவில் நடந்த லீக் ஆப் லெஜெண்ட்ஸ்: வைல்ட் ரிஃப்ட் (League of Legends: Wild Rift) நேரடி நிகழ்வின் போது, நடிகை ஷாவ் லூசி (Zhao Lusi) இன்னுமும் பழைய ஐக்யூ 11ஸ் மாடலை பயன்படுத்துவதை பார்வையாளர்கள் கவனித்து உள்ளார். அதை தொடர்ந்து, ஐக்யூ-வின் தயாரிப்பு மேலாளர், அவருக்கு வரவிருக்கும் ஐக்யூ 15 மாடலை பரிசளிக்கும்படி நகைச்சுவையாக பரிந்துரைத்தார்.

உடனே அந்த நடிகை புதிய ஸ்மார்ட்போனை பெறுவார் என்பது ஐக்யூவின் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் வழியாக உறுதி செய்யப்பட்டது. ஆக ஐக்யூ நிறுவனமானது ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை சூசகமாக "டீஸ்" செய்ய தொடங்கி உள்ளது. ஆக எதிர்பார்க்கப்படுவது போலவே ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டுக்குள் (அக்டோபர்மாதத்திற்குள்) அறிமுகப்படுத்தப்படலாம். மறுகையில் உள்ள ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2026 முதல் பாதியில் அறிமுகமாகலாம்

ஐக்யூ 15 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் இது ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

ஐக்யூ 15, ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இரண்டுமே 6.85-இன்ச் 2கே எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் மற்றும் 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேமரா செட்டப்பில் நடுத்தர அளவிலான சென்சார் கொண்ட 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ யூனிட்டும் இடம்பெறலாம். மேலும் இந்த சீரீஸில் சுமார் 7,000mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன்களுமே ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அதே ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256ஜிபி / 512ஜிபி யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி / 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, ஐபி68 + ஐபி69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Launch Teased Could be First Phone to Pack Snapdragon 8 Elite 2 along with 7000mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X