நச்சுனு நான்கு iQOO 5ஜி போன்கள் மீது நறுக் ஆபர்.. ஜூலை 4-6.. ஆர்டரில் தத்தளிக்க போகும் அமேசான்!
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை அமேசான் பிரைம் டே சேல் 2026 (Amazon Prime Day Sale 2026) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது பிரைம் மெம்பர்களுக்கான ஒரு சிறப்பு விற்பனை ஆகும்.
இந்த விற்பனையில் பல பிரபலமான நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி விலை குறைப்புகளை, தள்ளுபடி மற்றும் ஆபர்களை வழங்க உள்ள நிலையில்.. ஐக்யூ நிறுவனமானது ஐக்யூ ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு பிக் சேவிங்ஸ்-ஐ (Big Savings) கொடுக்கும்வகையில், 4 லேட்டஸ்ட் ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் மீது கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G): இதன் விற்பனை விலை (Sale Price) ரூ.20,999 என்றும், இந்த ஸ்மார்ட்போனின் மீது 6 மாதங்கள் வரை வட்டி இல்லா இஎம்ஐ வசதி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ நியோ 10 5ஜி (iQOO Neo 10 5G): இதன் விற்பனை விலை ரூ.38,999 என்றும், இந்த ஸ்மார்ட்போனின் மீது 6 மாதங்கள் வரை வட்டி இல்லா இஎம்ஐ வசதி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ 15ஆர் 5ஜி (iQOO 15R 5G): இதன் விற்பனை விலை ரூ.45,999 என்றும், இந்த ஸ்மார்ட்போனின் மீது 6 மாதங்கள் வரை வட்டி இல்லா இஎம்ஐ வசதி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ 15 5ஜி (iQOO 15 5G): இதன் விற்பனை விலை ரூ.71,999 என்றும், இந்த ஸ்மார்ட்போனின் மீது 12 மாதங்கள் வரை வட்டி இல்லா இஎம்ஐ வசதி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ 15ஆர் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 4 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+ சான்றிதழ் மற்றும் 4,320Hz PWM டிம்மிங் ரேஷியோ ஆதரவையும் கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிரேம் இண்டர்போலேஷன் வழியாக கேமிங்கின் போது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை LPDDR5x ரேம், 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் அட்ரெனோ 826 ஜிபியு (Adreno 826 GPU) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது OIS உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-700V ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் 7600mAh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டுள்ளது, இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா
- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications