Home
Mobile

OnePlus-க்கு ஒரே குஷியா இருக்குமே.. 3 iQOO 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகள் எகிறியது.. எந்த மாடல்கள்?

மெமரி பற்றாக்குறை (memory shortage) ஆனது ஸ்மார்ட்போன் துறையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பல நிறுவனங்கள் பல வகையான ஸ்மார்ட்போன்களின் விலைகளை சில முறை உயர்த்திவிட்ட நிலையில், தற்போது ஐக்யூ நிறுவனம் மேலும் சில ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

ஐக்யூ நிறுவனம் தனது பிளாக்ஷிப் (Flagship), சப்-பிளாக்ஷிப் (Sub-flagship) மற்றும் மிட்-ரேன்ஜ் (Mid-range) பிரிவில் உள்ள சில ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. அந்த ஸ்மார்ட்போன்கள் - ஐக்யூ 15 (iQOO 15), ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மற்றும் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மாடல்கள் ஆகும். இந்த விலை உயர்வு நடவடிக்கை ஆனது ஐக்யூவின் முக்கிய போட்டியாளர் ஆக பார்க்கப்படும் ஒன்பிளஸ்-க்கும் அதன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3 iQOO 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகள் எகிறியது.. எந்த மாடல்கள்?

ஐக்யூ 15 பழைய விலை VS புதிய விலை:
ஐக்யூ 15 (12GB + 256GB) - ரூ.72,999 இல் இருந்து ரூ.74,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15 (12GB + 512GB) - ரூ.79,999 இல் இருந்து ரூ.81,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது

ஐக்யூ 15ஆர் பழைய விலை VS புதிய விலை:
ஐக்யூ 15ஆர் (8GB + 128GB) - ரூ.46,999 இல் இருந்து ரூ.47,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15ஆர் (12GB + 256GB) - ரூ.50,999 இல் இருந்து ரூ.52,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15ஆர் (12GB + 512GB) - ரூ.57,999 இல் இருந்து ரூ.59,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது

ஐக்யூ நியோ 10 பழைய விலை VS புதிய விலை:
ஐக்யூ 15 (8GB + 256GB) - ரூ.35,999 இல் இருந்து ரூ.37,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது
ஐக்யூ 15 (12GB + 256GB) - ரூ.40,999 இல் இருந்து ரூ.42,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது

ஐக்யூ 15ஆர் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 4 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+ சான்றிதழ் மற்றும் 4,320Hz PWM டிம்மிங் ரேஷியோ ஆதரவையும் கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிரேம் இண்டர்போலேஷன் வழியாக கேமிங்கின் போது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை LPDDR5x ரேம், 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் அட்ரெனோ 826 ஜிபியு (Adreno 826 GPU) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது OIS உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-700V ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் 7600mAh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டுள்ளது, இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது

Best Mobiles in India

English summary
iQOO 15 iQOO 15R iQOO Neo 10 Smartphones Prices Increased in India Check New VS Old Prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X