Home
Mobile

OnePlus காலி.. ரூ.7000 ஆபர் விலையில் விற்பனை ஆரம்பம்.. புத்தம் புது 7000mAh பேட்டரி iQOO போன்!

இந்தியாவில் - ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய போட்டியாளர் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் இன்று (டிசம்பர் 1 ஆம் தேதி) முதல் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும். கடந்த நவம்பர் 26 அன்று இந்தியாவில் அறிமுகமான இது, ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு (அதாவது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அதே விலைக்கு) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

OnePlus காலி.. ரூ.7000 ஆபர் விலையில் விற்பனை ஆரம்பம்!

இதே ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது. இதன் விலை ரூ.79,999 ஆகும். ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஆல்பா (பிளாக்) மற்றும் லெஜண்ட் (ஒயிட்) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அமேசான் இந்தியா, ஐக்யூ இ-ஸ்டோர், விவோ எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் மீதான சலுகைகள்: முன்கூட்டிய அறிமுக சலுகைகளின் (Early bird launch) ஒரு பகுதியாக, ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ், எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசி வங்கிகளின் வழியாக ரூ.7,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியை பெறலாம்.

இதன் மூலம் - ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலையை முறையே ரூ.64,999 மற்றும் ரூ.71,999 ஆக குறைக்க முடியும். இது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விற்பனையை முடிந்த வரை பாதிக்கும் ஒரு டிஸ்கவுண்ட் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சேர்த்து ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் மீது எக்ஸ்சேஞ்ச் போனஸையும் தேர்வு செய்யலாம். இருப்பினும், இறுதி டிஸ்கவுண்ட் விலை ஆனது நீங்கள் கொடுக்கும் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலையை பொறுத்து மாறுபடும். மேலும் நீங்கள் இருக்கும் இடத்தை பொருத்தும் இந்த சலுகை மாறுபடும்.

இது தவிர, தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள கூடுதல் தள்ளுபடி கூப்பனை ஐக்யூ பிராண்ட் வழங்குகிறது. கடைசியாக ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முழு விலையையும் முன்கூட்டியே செலுத்த விரும்பாதவர்கள் 24 மாதங்கள் வரையிலான எந்த கால அவகாசமும் இல்லாத இஎம்ஐ விருப்பங்களையும் பயன்படுத்தலாம்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா

- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி

ஐக்யூ 15 போட்டியாளர் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை:
- 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் தேர்ட் ஜெனரேஷன் பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 24 மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50 மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- 7300mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 India Sale Started With Rs 7000 Bank Discount A Complete Domination Against OnePlus 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X