1 இல்ல 6 ஆப்ஷன்ஸ் இருக்கு.. 7000mAh பேட்டரி உடன் அறிமுகமான iQOO 15 க்கு பதிலாக வேறு எந்த Phone-ஐ வாங்கலாம்?
ஒன்பிளஸ் 15 க்கு சரியான வில்லன், ரியல்மி ஜிடி 8 ப்ரோவிற்கு தரமான போட்டியாளர் என்றெல்லாம் கூறப்பட்ட ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் ஆனது சற்றே மலிவான விலைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்த்த வேளையில், இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனும் அதே ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ 15 ஸ்மாட்போனின் பேஸிக் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கும், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 7,000 உடனடி வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட 2 வகைகளின் விலைகள் முறையே ரூ. 64,999 மற்றும் ரூ. 71,999 ஆக குறைக்கப்படுகின்றன.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அனைத்து பயனர்களுக்கும் அமேசான் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இதற்கிடையில், ப்ரையாரிட்டி பாஸ்-ஐ வாங்கிய பயனர்கள் நவம்பர் 27 ஆம் தேதி நண்பகல் முதல் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது லெஜண்ட் மற்றும் ஆல்பா பிளாக் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும்.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் Samsung M14 AMOLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்
- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது பழைய ஐக்யூ 13 உடன் ஒப்பிடும் போது செயல்திறன் மற்றும் கேமரா ஆகிய விஷயங்களில் பல மேம்படுத்தல்களை கொண்டு வருகிறது. இருப்பினும், இதே போன்ற விலையில், இதே போன்ற அம்சங்களைக் கொண்ட மற்ற ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 6 ஆப்ஷன்கள் உள்ளன.
6. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) - ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.
5.ஷாவ்மீ 15 (Xiaomi 15) - ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.
4. விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) - ரூ.56,830 க்கு க்கு வாங்க கிடைக்கிறது.
3. ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro)- ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) - ரூ. 74,999 க்கு வாங்க கிடைக்கிறது.
1. ஒன்பிளஸ் 15 (OnePlus 15) - ரூ. 72,999 க்கு வாங்க கிடைக்கிறது:
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7300mAh பேட்டரி
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு


Click it and Unblock the Notifications








