Home
Mobile

சொளையா ரூ.13,000 கம்மி.. OnePlus 15-ஐ அவுட் ஆக்கிய iQOO 15 Price.. 5ஜி, 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனில் உள்ள அதே பிளாக்ஷிப் சிப்செட் உடன், ஒன்பிளஸ் 15 மாடலுக்கு போட்டியாக வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அன்று ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஐக்யூ 15 விலை நிர்ணயம் குறித்த ஒரு புதிய லீக் கிடைத்துள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், யூடியூப் சேனல் TTmrIGL வழியாக ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் காணப்பட்டதாக கூறப்படும் விலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சொளையா ரூ.13,000 கம்மி.. OnePlus 15-ஐ அவுட் ஆக்கிய iQOO 15 Price!

அதன்படி, ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.72,999 ஆக இருக்கலாம். இதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.64,999 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பேங்க் சலுகைகளுடன், பேஸிக் வேரியண்ட்டின் விலை சுமார் ரூ.59,999 ஆகக் குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது மிகவும் மலிவான விருப்பமாக இருக்கும். குறிப்பாக ஒன்பிளஸ் 15 உடன் ஒப்பிடும் போது ரூ.59,999 என்பது ரூ.13,000 குறைவாகும்.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 246ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.72,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.59,999 என்கிற விலை ஒரு லீக் தகவல் தான் என்பதையும், இது மாறலாம் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் Samsung M14 AMOLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்

- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது. மேலும் 4.608ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடையும் வழங்குகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா பிளஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 India Price Leaked Just Before Pre Booking Starting Today November 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X