எழுதி வெச்சுக்கோங்க.. மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. IP69 ரேட்டிங்.. 7000mAh பேட்டரி.. எந்த போன்?
ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஐக்யூ நிறுவனம். இந்நிலையில் புதிய ஐக்யூ போனின் படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு பூச்சு கொண்ட மாடல் ஒன்றும் கிரே நிறத்தில் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சாம்சங் OLED பேனல் உடன் ஐக்யூ 15 போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட் உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 6.8-இன்ச் வசதியுடன் இந்த ஐக்யூ 15 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ 15 போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்புடன் இந்த புதிய ஐக்யூ 15 போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் டூயல் ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் சிப் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ 15 போனில் உள்ளன. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: gizmochina


Click it and Unblock the Notifications