ரூ.4,000 ஆஃபர் யாரு விடுவா.. பிப்.9 முதல் பிப்.12 வரை.. iQOO குவெஸ்ட் டேஸ் விற்பனை.. எந்தெந்த மாடல்கள்?
அமேசான் தளத்தில் நடக்கும் ஐக்யூ குவெஸ்ட் டேஸ் விற்பனை 2026 (iQOO Quest Days Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் ரூ.4,000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ரூ.9,999 விலைக்கு கிடைக்கும் ஐக்யூ இசட்10 லைட் முதல் ரூ.72,998 விலைக்கு கிடைக்கும் ஐக்யூ 15 வரையில் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ குவெஸ்ட் டேஸ் விற்பனையானது பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டது. பிப்ரவரி 12ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தேதிகளில் ஆர்டர் செய்யப்படும் ஐக்யூ மாடல்களுக்கு மட்டுமே பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகைகள் கிடைக்கும். அதேபோல எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,998 ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.68,998 விலைக்கு கிடைக்கிறது. இதில் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் அடங்கும். மேலும், 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. ரூ.53,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.
ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,998ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.20,998 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதற்கும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ரூ.21,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.
ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,998ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.34,998 விலைக்கு கிடைக்கிறது. ரூ.34,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கொடுக்கப்படுகிறது.
ஐக்யூ இசட்10எக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,748 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.14,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.
ஐக்யூ இசட்10ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,998ஆக இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,998 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கும். ரூ.21,550 எக்ஸ்சேஞ்ச் கொடுத்துள்ளது.
ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,998 ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.25,998 விலைக்கு கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் .ரூ.25,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.
ஐக்யூ இசட்10 லைட் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,998 ஆக இருக்கிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆவே, ரூ.9,998 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.10,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். இந்த சலுகைகளை பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








