SALE பொளக்க போகுது.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 144Hz டிஸ்பிளே உடன் புது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் ஆனது நாளை, அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாக உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. கூடவே இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மற்றும் விலை குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் சமீபத்திய பதிவின்படி ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கும்?
- சாம்சங் M14 LEAD AMOLED 8T LTPO டிஸ்பிளே
- 3168 x 1440 பிக்சல்ஸ்
- 2கே பிளஸ் ரெசல்யூஷன்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஆன்ட்டி-ரெஃப்ளெக்ஷன் கோட்டிங்
- பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- கேமிங் கிராபிக்ஸை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட Q3 சிப்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56-இன்ச் சென்சார் கொண்ட 50MP ப்ரைமரி கேமரா + 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூமை வழங்கும் 50MP சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32MP செல்பீ கேமரா
- ஹாப்டிக் பீட்பேக்கிற்கான பெரிய 091640 எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார்
- சிமிட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்ஸ்
- யுஎஸ்பிஸ்-சி (ஜென் 3.2) போர்ட்
- 8K வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68/69 ரேட்டிங்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 6 ஓஎஸ்
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி
ஐக்யூ 15 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும், என்ன விலைக்கு வரும்? சீன அறிமுகத்தை தொடர்ந்து ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது கூடிய விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும். இது 2025 நவம்பர் மாத நடுப்பகுதி முதல் பிற்பகுதிக்குள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ. 60,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ 13 ஆனது ரூ.54,999 க்கு அறிமுகமானது.
ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256ஜிபி / 512ஜிபி யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி / 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, ஐபி68 + ஐபி69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது


Click it and Unblock the Notifications








