4 மணி நேரத்தில் 1,42,000 யூனிட்கள் விற்பனை.. அடிச்சு புடிச்சு வாங்கப்பட்ட புது iQOO போன்!
ஐக்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆகவும்.. வருகிற அக்.27 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 15 மற்றும் நேற்று அறிமுகமான ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஆகிய 2 மாடல்களுக்கும் கடும் போட்டியாகவும்.. ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் 20 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமானது.
மேற்கண்ட 3 ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டை (Snapdragon 8 Elite Gen 5) பேக் செய்கின்றன. இதுதான் போட்டியே; இதற்காகத்தான் இந்த 3 ஸ்மார்ட்போன்களும் அவசர அவசரமாக அறிமுகம் ஆகின்றன. ஆனால் இந்த போட்டியில் ஐக்யூ முந்திக்கொண்டது. சீன அறிமுகத்தை தொடர்ந்து உடனடியாக விற்பனையையும் தொடங்கியது.

விற்பனையில் வரலாற்று சாதனை: ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விற்பனை மூலம் ஐக்யூ நிறுவனம் ஒரு புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வெறும் 4 மணி நேரத்தில் 1,42,000 க்கும் மேற்பட்ட ஐக்யூ 15 யூனிட்கள் விற்று தீர்ந்ததாக ஐக்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது முந்தைய ஜெனரேஷன் ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும்போது 87 சதவீதம் அதிகரிப்பு ஆகும். அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, எந்த முன்கூட்டிய ஆர்டர் காலமும் இல்லாமல் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது தான் இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என்பதையும் ஐக்யூ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதே "பாணி" இந்திய அறிமுகத்தின் போதும் நடக்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படியும் இது இன்னு அடுத்த சில நாட்களில் அல்லது சில வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகமாகி விடும். ஏனென்றால் ஒன்பிளஸ் 15 ஆனது நவமவர் 13 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை விவரம்: சீனாவில் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைவிட சற்றே அதிகமான விலை நிர்ணயத்தை (ரூ.60,000 க்குள்) நாம் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ 13 ஆனது ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யபட்டு இருந்தது.
ஐக்யூ 15 முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 2கே ரெசல்யூஷன்
- 130Hz ஸ்க்ரீன் சாம்ப்ளிங் ரேட்
- 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 508பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- கேமிங் மோட்-இல் 300Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- பி3 கலர் கேமட்
- 94.37 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரினோ 840 ஜிபியு
- இந்த சிப்செட் இரண்டு 4.6GHz செயல்திறன் கோர்களையும் ஆறு 3.62GHz ஆறு செயல்திறன் கோர்களையும் கொண்டுள்ளது.
- இது ஒரு தனியுரிம க்யூ3 கேமிங் சிப்பையும் கொண்டுள்ளது
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 4கே வீடியோ பதிவை ஆதரிக்கும் 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 6
- ப்ளூடூத் 6, டூயல்-பேண்ட் வைஃபை 7, ஜிபிஎஸ்
- அளவீட்டில் 163.65×76.80×8.10மிமீ
- எடையில் சுமார் 221 கிராம்


Click it and Unblock the Notifications








