Home
Mobile

OnePlus 15 ஓரம்போ.. அதே சிப், 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங் உடன் புதிய iQOO போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) - இந்த சிப்செட்டின் பெயரை நன்றாக நினைவில் வைத்து கொள்ளவும். ஏனென்றால் இதுதான் - 2026 ஆம் ஆண்டின் சில பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவுள்ளது.

இந்த சிப்செட் தான் - ஒன்பிளஸ் VS ஐக்யூ VS ரியல்மி VS ஷாவ்மீ என்கிற போட்டியை சூடுபிடிக்க வைத்துள்ளது. யார் இந்த சிப்செட்டை கொண்ட ஸ்மார்ட்போனை முதலில் அறிமுகம் செய்து.. உலகளாவிய மற்றும் இந்திய சந்தையில் "கல்லா கட்ட போகிறார்கள்" என்பது தான் போட்டியே!

OnePlus 15 ஓரம்போ.. அதே சிப், 7000mAh பேட்டரி உடன் புதிய iQOO போன்!

இந்த காரணத்திற்காக தான் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி உடனான ஒன்பிளஸ் 15 இந்தாண்டு முன்கூட்டியே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி உடனான ஐக்யூ 15 (iQOO 15) அடுத்த வாரம் (அக்.20) சீனாவில் அறிமுகமாகிறது.

கடந்த மாதம் அறிமுகமான ஷாவ்மீ 17 சீரீஸ் (Xiaomi 17 Series) பிறகு இந்த சிப்பை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் - ஐக்யூ 15 ஆகும். இதற்கிடையில் ஒரு லேட்டஸ்ட் லீக் வழியாக ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்திய லான்ச் டைம்லைன் (Launch Timeline) குறித்த விவரம் வெளியாகியுள்ளது

அதன்படி ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 2025 நவம்பர் நடுப்பகுதியிலோ அல்லது பிற்பகுதியிலோ அறிமுகம் செய்யப்படலாம். ஆக இந்தியாவில் - ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனை தொடர்ந்து, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி-ஐ பயன்படுத்தும் இரண்டாவது போனாக ஐக்யூ 15 அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.60,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது இது - இந்தியாவில் ரூ.54,999 க்கு அறிமுகமான ஐக்யூ 13 (iQOO 13) மாடலை விட ஒரு சிறிய விலை உயர்வை மட்டுமே சந்திக்கும்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.85-இன்ச் 2K பிளாட் LTPO AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் சிறந்த கிராபிக்ஸ் மற்றும் நிகழ்நேர செயல்திறனுக்காக ஒரு புதிய Q3 கேமிங் சிப்

- LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP ப்ரைமரி கேமரா (1/1.56" சென்சார்)
- 50MP அல்ட்ரா-வைட் கேமரா
- 50MP 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- முன்பக்கத்தில் 50MP செல்பீ கேமரா

- பெரிய 7000mAh பேட்டரி
- 100W வயர்டு சார்ஜிங்
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68/IP69 ரேட்டிங்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான OriginOS 6 ஓஎஸ்
- கூடுதல் ஸ்டைலுக்காக கஸ்டமைஸ் செய்யக்கூடிய RGB லைட்ஸ்

முன்னதாக அறிமுகமான ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
-ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா
- முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா
- 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Could be 2nd Phone to launch in India With Snapdragon 8 Elite Gen 5 Chipset
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X