Home
Mobile

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது இந்த கேமராவுக்கு.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. புது iQOO போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடலான ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் கேமரா டிசைனானது, ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் மிரளவிட்டுள்ளது. ஏற்கனவே, 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் கசிந்து எதிர்பார்ப்பை எகிற விட்டது. இப்போது, எல்இடி ஸ்ட்ரிப் லைட்டுடன் கேமரா பம்ப் இருக்கிறது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருகிற அக்டோபர் 20ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும்படி ஐக்யூ நிறுவனம், அந்த ஸ்மார்ட்போனின் கேமரா டிசைன் மற்றும் கியூ2 கேமிங் சிப் ஆகியவற்றை போஸ்டர்கள் மூலம் உறுதி செய்துள்ளது. கேமரா டெகோ அதிக தடிமனில் இருக்கிறது.

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது இந்த கேமராவுக்கு.. 7000mAh பேட்டரி!

ஏனென்றால், டெகோவில் எல்இடி ஸ்ட்ரிப் லைட் இடம்பெற்றுள்ளது. கேமரா லென்ஸ்களுக்கு கீழே இடம்பெற்றிருக்கிறது. இது ஸ்பிளாஷ் போல செயல்படுமா அல்லது புது டிசைனுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர வேறு பீச்சர்கள் உறுதி செய்யப்படவில்லை.

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன் மற்றும் 6,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் எதிர்பார்க்கலாம். இதுபோக ஏஆர் ஆன்டி-கிளார் கோட்டிங் (AR Anti-glare) வருகிறது.

மேலும், போல்-லெஸ் டெபோலாரிஷன் டெக்னாலஜி (Pol-less Depolarization Technology) கிடைக்க இருக்கிறது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் வேரியண்ட் வர இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வர இருக்கிறது.

சீன மார்கெட்டில் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் பன்டச்ஓஎஸ் எதிர்பார்க்கலாம். 7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களை இதில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், அதிக பேட்டரி மற்றும் ஆர்ஜிபி லைட் கேமிங் பிரியர்கள் விரும்பும் பீச்சர்களாக இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. மற்ற பீச்சர்களை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்தியாவில் வெளியான ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போனில் மான்ஸ்டர் ஹாலோ (Monster Halo) லைட் கிடைத்தது. கேமராவை சுற்றி ப்ளோட்டிங் லைட்னிங் கிடைத்தது. இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்டு ஐக்யூ 15 மாடலில் கிடைக்க இருக்கிறது.

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. 6.82 இன்ச் குவாட் எச்டிபிளஸ் டிஸ்பிளே கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சாருடன் வருகிறது. 50 எம்பி அல்ட்ரா கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6.82 இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Camera Design Officially Teased Ahead of Launch Expected Launch Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X