Home
Mobile

ரூ .6000 டிஸ்கவுண்ட்டில் 7000mAh பேட்டரி.. அமேசானில் ஆர்டர்களை அள்ளும் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

கடந்த வாரம் ஐக்யூ (iQOO) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ 15 மாடலின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. அது ஐக்யூ 15 ஏபெக்ஸ் எடிஷன் (iQOO 15 Apex Edition) ஆகும். தற்போது இந்த மாடலின் (இன்று, ஏப்ரல் 6 முதல்) இந்திய விற்பனை தொடங்கி உள்ளது.

முக்கிய அம்சங்கள்: புதிய ஐக்யூ 15 ஏபெக்ஸ் எடிஷன் ஆனது ஏற்கனவே உள்ள ஆல்ஃபா மற்றும் லெஜண்ட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களுடன் இணைகிறது. ஒரிஜினல் மாடலை போலவே, இதுவும் குவால்காமின் பிளாக்ஷிப் 3என்எம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது; 2கே ரெசல்யூஷன் 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.85-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது; பெரிய 7000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ரூ .6000 டிஸ்கவுண்ட்டில் 7000mAh பேட்டரி!

விலை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ 15 ஏபெக்ஸ் எடிஷனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.79,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ஆபர்கள்: அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, அமேசான் இந்தியா வலைத்தளம் ரூ.6,000 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது. இந்த சலுகையை சரியாக பயன்படுத்தினால் மேற்கண்ட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விற்பனை விலையையும் முறையே ரூ.66,999 மற்றும் ரூ.73,999 ஆக குறைக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் - ஐக்யூ இந்தியா இணையதளம், அமேசான், விவோ எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் நாடு முழுவதும் உள்ள ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கும்.

விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் ஐக்யூ 15 ஏபெக்ஸ் எடிஷன் ஆண்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6 கொண்டு இயங்குகிறது. இதற்கு 5 ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 7 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.85-இன்ச் சாம்சங் M14 8T LTPO அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 2கே ரெசல்யூஷன், 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 6000 நிட்ஸ் [பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உள்ளது. இது 16GB வரையிலான LPDDR5x ரேம், 512GB வரையிலான UFS4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் க்யூ3 சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் ஆகியவைகள் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 16 ஏபெக்ஸ் எடிஷனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் சோனி IMX921 ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி IMX882 1/1.95-இன்ச் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது

முன்புறத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. ஐக்யூ 15 ஏபெக்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 + IP69 தரமதிப்பீடு பெற்ற கட்டமைப்பை கொண்டுள்ளது. கடைசியாக இதில் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உள்ளது, இது 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Apex Edition India Sale Started Amazon Announced Rs 6000 Bank Discount Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X