மார்க்கெட்டை சிதைச்சு விட்ட iQOO-வின் புது போன்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 16GB ரேம், 1TB மெமரி!
ஐக்யூ (iQOO) நிறுவனமானது "இதுக்கு தானே இந்தியாவில் உள்ள மொத்த ஸ்மார்ட்போன் ஆர்வலர்களும், ரசிகர்களும் வெயிட்டிங்" என்று கூறும் படியான "முரட்டு" அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. அது ஐக்யூ 15 (iQOO 15) மாடல் ஆகும்.
ஐக்யூ 13 (iQOO 13) அறிமுகமாகி, கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மற்றும் 7000mAh அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட பேட்டரி ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐக்யூ 15 குறித்து மேலும் பல விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஐக்யூ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் ஆன கலன்ட் வி (Galant V), வரவிருக்கும் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது என்பி பிளஸ் பேனல் (NB Plus Panel) என்றும் அழைக்கப்படும் 2கே சாம்சங் எவரெஸ்ட் அமோஎல்இடி (2K Samsung Everest AMOLED) டிஸ்பிளே பேனலைக் கொண்டிருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆக ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது "முன் எப்போதும் இல்லாத" அதிக பிரகாசம், வண்ண துல்லியம், மாறுபாடு, ஒளி பரிமாற்றம் மற்றும் குறைக்கப்பட்ட பிரதிபலிப்புகளுடன் சிறந்த தெளிவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 6,000 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. கூடவே ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை போலவே ஆன்ட்டி-ரெஃப்ளெக்ஷன் கோட்டிங்கும் இருக்கும்.
மேலும் அவர் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் (குவால்காமின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆக இருக்கலாம்) மூலம் இயக்கப்படும் என்பதையும், இது மார்க்கெட்டில் இருக்கும் மிகப்பெரிய 8கே வேப்பர் சேம்பர் சிஸ்டமை பெறும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆக ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் தற்போதுள்ள மாடல்களை விட மேம்பட்ட வெப்ப மேலாண்மை அமைப்பு இருக்கலாம்.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh க்கும் மேலான பேட்டரியை கொண்டிருக்கலாம். இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் இடம்பெறலாம்
கேமராக்களை பொறுத்தவரை ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் 1/1.5-இன்ச் பிரைமரி சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் உட்பட மொத்தம் கேமராக்களை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.8-இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். கடைசியாக இது அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் டூயல் ஸ்பீக்கர்களுடன் வரலாம்.
ஐக்யூ 15 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் இது ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்னு எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் தான் முதலில் அறிமுகமாகும் என்பதால், சீன அறிமுகம் முடிந்த கையோடு இந்திய விலை நிர்ணயம் குறித்த தெளிவை நாம் பெறலாம். நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் ரூ.54,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது.
ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா
- 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா
- 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரி


Click it and Unblock the Notifications