Home
Mobile

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. சோனி கேமரா.. 6150mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் 13 போன் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பு தரமான அம்சங்களுடன் இந்த ஐக்யூ 13 போன் வெளிவந்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் 13 போனுக்கு போட்டியாக இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஐக்யூ 13 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ 13 அம்சங்கள் (iQOO 13 Specifications): 6.82-இன்ச் 2கே BOE Q10 ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ 13 போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2592ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (2592Hz PWM Dimmin), 3168 X 1440பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. சோனி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் இந்த ஐக்யூ 13 போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-ஹவுஸ் க்யூ2 கேமிங் சிப் (in-house Q2 gaming chip) கொண்டுள்ளது இந்த போன். இது பிசி-லெவல் 2கே டெக்ஸ்ச்சர் சூப்பர்-ரெசல்யூஷன் மற்றும் நேட்டிவ்-லெவல் 144எஃப்பிஎஸ் சூப்பர் பிரேம் ரேட்டை (144FPS super frame rate) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

OriginOS 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 மெயின் சென்சார் + 50எம்பி சாம்சங் S5KJN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்816 டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது.

IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது இந்த ஐக்யூ 13 போன். மேலும் 7K டூயல் டிரைவ் ஹீட் சிங்க் (7K dual-drive heat sink) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் எந்தவித பாதிப்பும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

6150mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), வைஃபை 7 (Wi-Fi 7), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. சோனி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆனால் தற்போது ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். பிளாக், கிரீன், கிரே,ஒயிட் நிறங்களில் இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வரும். இப்போது இந்த போனின் விலையைப் பார்க்கலாம்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 13 போனின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.47,200)-ஆக உள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.50,800-ஆகும், 12ஜிபி + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.53,100-ஆகும், 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.55,500-ஆகும், 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.61,400-ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 13 with Snapdragon 8 Elite launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X