GOAT ஆல் ஏரியா.. மிரளவிட்ட SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே, கியூ2 கேமிங் சிப்செட் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசஸர் சிஸ்டம் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் கோட் அவுட்புட் கொடுக்கும்படி ஐக்யூ 13 (iQOO 13) மாடலானது, இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் இந்த ஐக்யூவின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை தேதி விவரங்கள் இதோ.
கேமரா, சிப்செட், பேட்டரி, ரேம் மட்டுமல்லாமல் டிசைனிலும் பிரீமியமாக இருப்பதால், இந்த ஐக்யூ 13 போனை கோட் மாடலாக அந்த நிறுவனம் பிராண்ட் செய்கிறது. டிசைனை பார்க்கையில், பிஎம்டபுள்யூ மோட்டோஸ்போர்ட் லோகோ பேனலில், மான்ஸ்டர் ஹாலோ எல்இடி (Monster Halo LED) கொண்டிருக்கிறது. ஹாலோவில் நோட்டிபிகேஷன், கேமிங், மியூசிக் இன்டிகேஷன் கிடைக்கிறது.

ஆகவே, கேமராவை சுற்றிலும் எல்இடி லைட் மூலம் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். இந்த டிசைனில் லெஜண்ட் எடிஷன் (Legend Edition) மற்றும் நார்டோ கிரோ (Nardo Grey) கலர்களில் கிடைக்க இருக்கிறது. லெஜண்ட் எடிஷனில் மோட்டோஸ்போர்ட் லோகோ டிசைன் கிடைக்கிறது. இந்த ஐக்யூ 13 போனின் பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக பேக் செய்யப்பட்டுள்ளன.
ஐக்யூ 13 அம்சங்கள் (iQOO 13 Specifications): இந்த ஐக்யூ போனில் 6.82 இன்ச் (3168 × 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்களுக்காக 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 2K ரெசொலூஷன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 510 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் பி3 கலர் காமட் பெற்று கொள்ளலாம்.
இதுவொரு கியூ10 (Q10) லைட்-எமிட்டிங் மெட்டீரியல் டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, கண்களுக்கு இடையூறு இல்லாமல், அவுட்புட் எதிர்பார்க்கலாம். இது கேமிங் பிரியர்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. இதுபோக கேமிங் விளையாடும்போது டிஸ்பிளேவில் லாக்-ப்ரீ கன்ட்ரோல் கொடுக்க அல்ட்ரா லோவ் டச் லேட்டன்சி (Ultra Low Touch Lantency) கிடைக்கிறது.

2592Hz டிம்மிங் ஃபிரிகொன்சி இருக்கிறது. மேலும், கேமிங் என்ஹான்ஸ்மெண்டுக்காக பிரத்யேகமான கியூ2 (Q2) சூப்பர்கம்ப்யூட்டிங் சிப்செட் கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா ஸ்பீடு அவுட்புட் கொடுக்கும் சிப்செட் உள்ளது. பிரீமியமான 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (3nm Snapdragon 8 Elite) சிப்செட் மற்றும் ஜியியு அட்ரினோ 830 (GPU Adreno 830) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆகவே, டிஸ்பிளே மற்றும் சிப்செட் பர்ஃபாமென்ஸ் உண்மையிலேயே கோட் அவுட்புட் கொடுக்கும்படியே இருக்கிறது. இதற்கு ஏற்ப பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 120W ஃபிளாஷ்சார்ஜ் (FlashCharge) மற்றும் 100W பிபிஎஸ் ப்ரோட்டோகால் சப்போர்ட் கிடைக்கிறது. வெறும் 10 நிமிடங்களில் 40 சதவீத சார்ஜிங் செய்யலாம்.
மேலும், 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதேபோல பிரீமியம் பீச்சர்களை கேமராவிலும் பார்க்க முடிகிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சார், ஓஐஎஸ் (OIS) மற்றும் விசிஎஸ் (VCS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. ஐஎம்எக்ஸ்816 (IMX816) சென்சார், 4X லாஸ்லெஸ் ஜூமிங் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.
மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. மேலும், கூகுள் லென்ஸ் சைடு பார் (Google Lens Sidebar), ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மற்றும் ஜெமினி அசிஸ்டன்ட் (Gemini Assistant) பீச்சர்கள் உள்ளன.
இந்த ஐக்யூ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 59,999ஆகவும் இருக்கிறது. டிசம்பர் 11ஆம் தேதி அமேசான் (Amazon) விற்பனைக்கு வருகிறது. அமேசான் ப்ரீ-புக்கிங் டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








