Home
Mobile

நாங்களும் போட்டிக்கு வர்றோம்.. ஜூலை 4 அறிமுகம்.. iQOO-வின் Flagship போன்.. ஆனால் ஒரு டிவிஸ்டு!

2025 ஜூலை மாதத்தில் நத்திங், சாம்சங், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ள நிலையில், ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது பிரபலமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் புதிய கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போனின் 'கிரீன் எடிஷன்' என்கிற புதிய கலர் ஆப்ஷனை (New Green Edition) வருகிற ஜூலை 4 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) வழியாக அறிமுமாகும் என்றும் அறிவித்துள்ளது.

ஜூலை 4 அறிமுகம்.. iQOO-வின் Flagship போன்.. ஆனால் ஒரு டிவிஸ்டு!

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்த புதிய க்ரீன் கலர் ஆப்ஷன் ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் லெஜண்ட் எடிஷன் (Legend Edition) மற்றும் நார்டோ கிரே (Nardo Grey) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களுடன் இணையும். கலர் ஆப்ஷனை தவிர்த்து ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் எல்லாம் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் (iQOO 13 Price in India) பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது, இதன் விலை ரூ.59,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இருப்பினும் புதிய க்ரீன் கலர் ஆப்ஷனின் விலை வெளியீட்டு தேதியான ஜூலை 4 இல் தான் உறுதி செய்யப்படும். அறியதோர்களுக்கு ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்த க்ரீன் கலர் ஆப்ஷன் ஏற்கனவே சீனாவில் வாங்க கிடைக்கிறது. தற்போது இந்திய சந்தைக்கும் வருகிறது. சரி ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை (iQOO 13 Specifications and Features) கொண்டுள்ளது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஜூலை 4 அறிமுகம்.. iQOO-வின் Flagship போன்.. ஆனால் ஒரு டிவிஸ்டு!

சிப்செட்டை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அதே ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256ஜிபி / 512ஜிபி யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி / 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, ஐபி68 + ஐபி69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

Best Mobiles in India

English summary
iQOO 13 New Green Edition Launching in India on July 4 What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X