ரூ.6000 கம்மியான விலைக்கு.. அடுத்த நாளே அறிமுகமாகி OnePlus 13-க்கு ஆப்பு அடிச்ச iQOO 13.. நவ.11 முதல் விற்பனை!
அவசர அவசரமாக நேற்று (அக்டோபர் 31 ஆம் தேதி) சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன், மறுநாளே (அதாவது நவம்பர் 1 ஆம் தேதியே) வேக வேகமாக அங்கே விற்பனைக்கு வந்ததற்கு முக்கிய காரணம் ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போன் தான்!
இப்படி ஒன்பிளஸ் நிறுவனமே பார்த்து பயந்த ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமானது. அதுவும் ஒன்பிளஸ் 13 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜை ஆப்ஷனை விட ரூ.6000 மலிவான விலைக்கு அறிமுகமாகி உள்ளது. அப்படி என்ன விலை? ஐக்யூ 13 என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது இந்திய அறிமுகம்? இதோ விவரங்கள்:

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர்10+ ஆதரவு, 144ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு BOE Q10 LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் உள்ள அதே ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை 256ஜிபி / 512ஜிபி / 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி IMX921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் IMX816 சென்சார், ஓஐஎஸ், 4x லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் 13 மாடலில் உள்ள 6000mAh பேட்டரியை விட பெரியதாகும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, IP68+IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது
ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சீனாவில் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.47,190 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் சீன விலை 4499 யுவான்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.53,150-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 16ஜிபி + 256ஜிபி ஆப்ஷனை பொறுத்தவரை சுமார் ரூ.50,730 க்கும், 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.53,090 க்கும், 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.55,450 க்கும் மற்றும் 16ஜிபி + 1டிபி ஆப்ஷன் சுமார் ரூ.61,350 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது லெஜெண்ட் (Legend), டிராக் (Track), நாடோ கிரே (Nado Gray) மற்றும் க்ரீன் (Green) கலர்களில் நவ.11 முதல் சீனாவில் வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13 மாடலின் மற்ற ஸ்டோரேஜ் ஆப்ஷன்க்ளின் விலை விவரங்களை பொறுத்தவரை 12ஜிபி ரேம் + 512ஜிபி மாடல் சுமார் ரூ.57,875-க்கும், 16ஜிபி ரேம் + 512ஜி மாடல் சுமார் ரூ.62,590-க்கும், 24ஜிபி ரேம் + 1டிபி மாடல் சுமார் ரூ.70,860-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு மாடல்களுமே இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது, இதை விட அதிக விலை நிர்ணயத்தை பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒன்பிளஸ் 13 இந்தியாவில் ரூ.77,000 க்கும், ஐக்யூ 13 ஆனது ரூ.55,000 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Photo Courtesy: iQOO / BOETechnology @BoeTechnology / Abhishek Yadav @yabhishekhd


Click it and Unblock the Notifications