Home
Mobile

சிங்கம் களமிறங்குது.. ஸ்பீட், பவர் எல்லாம் ஒரே போனில்.. iQOO 13 அறிமுக தேதி இதான்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..

விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமான iQOO பிராண்டின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக வெளிவரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் தான் iQOO 13 சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போனிற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. காரணாம், இந்த போனை iQOO நிறுவனம் அட்டகாசமான அம்சங்களுடன் உருவாக்கியுள்ளது. இந்த போனின் அம்சம் என்ன? இதன் விலை என்ன? இதன் அறிமுக தேதி எப்போது? இந்தியாவில் இது எப்போது வாங்க கிடைக்கும் என்ற முழு தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் சாதனம் என்றால், அது iQOO 13 என்று கூட நாம் சொல்லலாம். இந்தியாவில் இந்த புதிய iQOO 13 ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகமாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில முக்கியமான தகவல்கள் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன என்றே நாம் கூற வேண்டும்.

iQOO 13: சிங்கம் களமிறங்குது.. ஸ்பீட், பவர் எல்லாம் ஒரே போனில்..

புதிய iQOO 13 ஸ்மார்ட்போன் மாடல் வரும் டிசம்பர் 3, 2024 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த iQOO 13 போனின் மாடல் நார்டோ கிரேய் (Nardo Grey) மற்றும் லெஜெண்ட் எடிஷன் (Legend Edition) வேரியண்ட் ஆகிய நிறங்கள் கொண்ட புதிய மாடல்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது இரண்டுமே புதுமையான போனாக இருக்குமென்று கூறப்படுகிறது.

காரணம், iQOO 13 நார்டோ கிரேய் (iQOO 13 Nardo Grey) வேரியண்ட் மாடல் இத்தாலியில் உள்ள தனித்துவமான ரேஸிங் டிராக்கின் அடிப்படையான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் போல்ட் டிசைன் ஸ்பீட் மற்றும் பவர் ஆகிய இரண்டு விஷயங்களை குறிப்பதாக கூறப்படுகிறது. இது கண்ணாடி போன்ற மிரரிங் அழகுடன் அஸ்பிஹால்ட் வடிவமைப்பை எடுப்பாக காண்பிக்கிறது.

மறுபுறம், iQOO நிறுவனம் iQOO பிஎம்டபுள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் (iQOO BMW M Motorsport) மாடலையும் அறிமுகம் செய்யவுள்ளது. இது iQOO 13 லெஜெண்ட் எடிஷன் ( iQOO 13 Legend Edition) என்று குறிப்பிடப்படுகிறது. இதுவும் ஒரு தனித்துவமான வடிவமைப்பை பெரும் மாடலாக இருக்குமென்று கூறப்படுகிறது. வடிவமைப்பு தவிர, போனின் அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

இது 6.82'' இன்ச் அளவு கொண்ட 3168×1440 பிக்சல் (pixels) கொண்ட 2K+ 144Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதன் டிஸ்பிளே LTPO அல்ட்ரா-ஐ-கேர் (ultra-eyecare display) டிஸ்பிளேவுடன், பிளாட் ஸ்கிரீன் உடன் (flat screen) வெளிவருமென்று கூறப்படுகிறது. இது BOE's Q10 லுமினஸ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Qualcomm Snapdragon 8 Elite chipset) கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் வரும். iQOO 13 ஸ்மார்ட்போன் சாதனம் 6150mAh பேட்டரி உடன் 120W பாஸ்டா சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் இந்திய அறிமுகம் வரும் டிசம்பர் 3, 2024 ஆம் தேதி நடைபெறும். ஆனால், இதன் சந்தை விற்பனை 2025 இல் துவங்குமென்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 42,000 முதல் ரூ. 48,000 விலைக்குள் இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO 13 India Launch On December 3 2024 What To Expect From This New Flagship Smartphone Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X