Home
Mobile

டிசம்பர் 3 உறுதி.. சோனி கேமரா.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. வருகிறது புது ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய ஐக்யூ போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது ஐக்யூ 13 போன் ஆனது வரும் டிசம்பர் 3-ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ 13 அம்சங்கள் (iQOO 13 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் இந்த ஐக்யூ 13 போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இன்-ஹவுஸ் க்யூ2 கேமிங் சிப் (in-house Q2 gaming chip)கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

டிசம்பர் 3 உறுதி.. வருகிறது புது ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் OriginOS 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தைக் கொண்டு புதிய ஐக்யூ போன் இந்தியாவுக்கு வரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இதில் உள்ளது.

குறிப்பாக 6.82-இன்ச் 2கே BOE Q10 ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த ஐக்யூ 13 போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2592ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (2592Hz PWM Dimming), 3168 X 1440பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இந்த ஐக்யூ 13 போன் ஆனது OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 மெயின் சென்சார் + 50எம்பி சாம்சங் S5KJN1 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்816 டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு இதில் உள்ளது. பின்பு IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)கொண்டு வெளிவரும் இந்த ஐக்யூ 13 போன். அதேபோல் பிளாக், கிரீன், கிரே,ஒயிட் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3 உறுதி.. வருகிறது புது ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?

மேலும் 6150mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும்.பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), வைஃபை 7 (Wi-Fi 7), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.47,200 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 13 India launch date announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X