Home
Mobile

எடுத்ததும் ரூ.8000 டிஸ்கவுண்ட்.. ஆபர் விலையில் iQOO 13 விற்பனை ஆரம்பம்.. 16GB ரேம், 6150mAh பேட்டரி!

குவால்காமின் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் (Qualcomm Snapdragon 8 Elite chip) உடன் இந்தியாவில் அறிமுகமான இரண்டாவது ஸ்மார்ட்போனான ஐக்யூ 13 (iQOO 13) மாடலின் இந்திய விற்பனை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது.

16ஜிபி வரையிலான ரேம், மூன்று 50-மெகாபிக்சல் ரியர் கேமராக்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான விவோவின் ஃபன்டச் ஓஎஸ் 15 ஸ்கின், 120W பாஸ்ட் சார்ஜிங் உடனான பெரிய 6,000mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங் ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

எடுத்ததும் ரூ.8000 டிஸ்கவுண்ட்.. ஆபர் விலையில் iQOO 13 விற்பனை ஆரம்பம்

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அதே ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256ஜிபி / 512ஜிபி யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி / 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, ஐபி68 + ஐபி69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ 13 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனிலும் கிடைக்கிறது, இதன் விலை ரூ.59,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இரண்டுமே லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது அமேசான் இந்தியா மற்றும் ஐக்யூ இ-ஸ்டோர் வழியாக இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

அறிமுக சலுகையாக எச்டிஎப்சி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழியாக ஐக்யூ 13 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும்; கூடுதலாக விவோ மற்றும் ஐக்யூ டிவைஸ் ஓனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.5,000 தள்ளுபடிகிடைக்கும். இப்படியாக ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் மீது எடுத்ததுமே ரூ.8000 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 13 India First Sale Amazon Rs 3000 Bank Discount Rs 5000 Exchange Offer Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X