Home
Mobile

அதே சிப்செட்.. பிளாட் டிஸ்பிளே.. ஆனா OnePlus 13-ஐ விட ரூ.10,000 கம்மி.. iQOO 13 ஆர்டர் அள்ள போகுது!

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான போட்டியாளர் ஆக பார்க்கப்படும் ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போனை பற்றிய தகவல்கள்.. நாளுக்கு நாள்.. ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளன. முன்னதாக இது பிளாட் டிஸ்ப்ளே மற்றும் குறைந்தபட்ச பெசல்களுடன் மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை பெறும் என்கிற தகவல் வெளியானது, தற்போது ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? எங்களுக்கு கிடைத்த எல்லா விவரங்களும் இதோ:

ஐக்யூ 13 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் (iQOO 13 5G India launch date)? ஸ்மார்ட்ப்ரிக்ஸ் (​​SmartPrix) வழியாக கிடைத்த ஒரு லீக்ஸ் தகவலின்படி ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 5 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

OnePlus 13-ஐ விட ரூ.10,000 கம்மி.. iQOO 13 ஆர்டர் அள்ள போகுது!

இது பெருபாலும் உலகளாவிய வெளியீட்டு தேதியாகவே (Global Launch Date) இருக்கும். அதாவது ஐக்யூ 13 ஆனது முதலில் சீன சந்தையில் அறிமுகமாகும்; அதன் பின்னரே மற்ற சந்தைகளுக்கு வரும். ஆக ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்த அக்டோபர் மாதமே சீனாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (iQOO 13 Specifications)? இது "வரவிருக்கும்" ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பை (Snapdragon 8 Elite chip) பேக் செய்யும் என்றும், அது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கூட இதே சிப்செட் தான் இடம்பெறும் என்று யூகிக்கப்படுகிறது.

சாஃப்ட்வேரை பொறுத்தவரை, ஐக்யூ 13 ஆனது ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) உடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம், அறியாதோர்களுக்கு இது மிகவும் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. கேமராக்களைப் பொறுத்தவரை, ஐக்யூ 13 ஸ்மார்ட்போனால் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (50MP Triple Rear Camera Setup) இடம்பெறலாம் அதில் - ஒரு ப்ரைமரி சென்சார், அல்ட்ராவைட் லென்ஸ் (ultrawide lens) மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் (telephoto lens) ஆகியவைகள் அடக்கம்.

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் ஹைலைட் ஆக அதன் டிஸ்பிளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிஓஇ-யின் சமீபத்திய க்யூ10 பேனலை (BOE's latest Q10 panel) பேக் செய்யும் என்று ஐக்யூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் மென்மையான 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் (144Hz refresh rate) கொண்டிருக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை, இது 6150mAh செல் மூலம் சக்தியூட்டப்படும் என்று கூறப்படுகிறது, இது 100W பிபிஎஸ் மற்றும் பிடி சார்ஜிங்கை ஆதரிக்கும் (100W PPS and PD charging support) என்றும் கூறப்படுகிறது. இதுதவிர்த்து ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையும் (IP68 rating for dust and water resistance) நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த போனில் மெட்டல் ஃபிரேம் (metal frame) மற்றும் கூடுதல் ஸ்டைலுக்கான "ஹாலோ" லைட் ஸ்ட்ரிப்பும் (Halo light strip) இடம்பெறலாம்.

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் (iQOO 13 Price in India) எப்படி இருக்கும்? விலையைப் பொறுத்தவரை, ஐக்யூ 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சுமார் ரூ.55,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். இது ரூ.65,000 - ரூ.70,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை விட மிகவம் மலிவான விலையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 13 expected to launch in India on December 5 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X