புது GOAT வந்துடாப்ல.. 120W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. 144Hz டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 13 ஜிபி ரேம் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கும் ஐக்யூ 13 (iQOO 13) போனின் புதிய ஏஸ் கிரீன் (Ace Green) வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் சிப்செட் கொண்ட இந்த புது ஏஸ் கிரீன் வேரியண்ட்டின் விலை, விற்பனை தேதி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் டிசைன் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் அல்ட்ரா பிரீமியமாக ஐக்யூ 13 வெளியாகியது. இந்த பீச்சர்களின் அடிப்படையில் கோட் (GOAT) என்னும் டேக்லைன் அந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது. நார்டோ கிரே (Nardo Grey) மற்றும் ஒயிட் கலர் கொடுக்கும் லெஜெண்ட் (Legend) ஆகிய 2 கலர்களில் மட்டுமே வெளியாகியது.

இப்போது, ஏஸ் கிரீன் என்னும் புதிய கலர் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கலர் தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதேபோல விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. ஜூலை 12ஆம் தேதி இந்த ஏஸ் கிரீன் வேரியண்ட்டின் விற்பனை தொடங்க இருக்கிறது.
அமேசான் பிரைம் டே சேலில் (Amazon Prime Day Sale) கிடைப்பதால், ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் ஆனது ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் இந்த பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. விலை எப்படி?
இந்த ஐக்யூ 13 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும் இருக்கிறது. இது மற்ற கலர் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். ஜூலை 12ஆம் தேதி ஆர்டர் செய்யும்போது, ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.52,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஐக்யூ 13 அம்சங்கள் (iQOO 13 Specifications): இந்த ஐக்யூ போனில் 2K சூப்பர் ரெசொலூஷன் மற்றும் 144FPS சூப்பர் ஃபிரேம் ரேட் கொண்ட 6.82 இன்ச் எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 510 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மிஸ் டச் கன்ட்ரோல், வெட் ஹேண்ட் கன்ட்ரோல், 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது. ஆகவே, IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 100W பிபிஎஸ் புரோட்டோகால் கிடைக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு கியூ2 சிப்செட் மட்டுமல்லாமல், 4D கேம் வைப்ரேஷன் கொடுக்க அல்ட்ரா-வைடு வைப்ரேஷன் மோட்டார் உள்ளது. ட்ரம் மாஸ்டர் ஸ்பீக்கர் உள்ளது. 7K அல்ட்ரா விசி கூலிங் சிஸ்டம் உள்ளது. 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 விசிஎஸ் (Sony IMX921 VCS) மெயின் கேமரா வருகிறது. 50 எம்பி சோனி டெலிபோட்டோ கேமராவானது, 4X லாஸ்லெஸ் ஜூமிங்குடன் வருகிறது.
50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 4K ரெசொலூஷனுடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஃபன்டச்ஓஎஸ் 15 மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் எஸ்ஓசி (Octa Core Snapdragon 8 Elite 3nm SoC) கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே பிரீமியம் மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








