Home
Mobile

iQOO-வின் அடிமட்ட ஆபர்.. புது மாடல் மீது ரூ.10,000.. பழைய மாடல் மீது ரூ.18,000 நேரடி தள்ளுபடி.. எந்த மாடல்?

ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G) மற்றும் அதற்கு முன்னர் வெளியான ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஆகிய 2 மாடல்களுமே தற்போது ஆபர் விலையில் (Offer Price) வாங்க கிடைக்கின்றன.

ஐக்யூ இந்தியா (iQOO India) நிறுவனமானது, அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக, ஐக்யூ குவெஸ்ட் டேஸ் (iQOO Quest Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன்கீழ் ஐக்யூ 13 5ஜி மற்றும் ஐக்யூ 12 5ஜி ஆகிய 2 மாடல்களுமே முறையே ரூ.10,000 மற்றும் ரூ.18,000 என்கிற தள்ளுபடியை, அபாரமான ஆபர் விலையில் வாங்க கிடைகின்றன.

iQOO: புது மாடல் மீது ரூ.10,000.. பழைய மாடல் மீது ரூ.18,000 தள்ளுபடி!

இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஐக்யூ 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.61,999 க்கு பதிலாக ரூ.10,000 தள்ளுபடியை பெற்று ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.18,000 தள்ளுபடியை பெற்று ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஐக்யூ 12 5ஜி VS ஐக்யூ 13 5ஜி (iQOO 12 5G Vs iQOO 13 5G) அம்சங்கள்: ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் குவாட்-எச்டி LTPO AMOLEDடிஸ்பிளே, அந்த நேரத்தில் லேட்டஸ்ட் குவால்காம் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப், 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி ஆஸ்ட்ரோகிராஃபி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 100எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் உடனான 64எம்பி 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. இதன் ப்ரைமரி கேமரா மற்றும் டெலிஃபோட்டோ கேமரா ஆகிய இரண்டுமே சூப்பர் மூன்மோட்-ஐ தரிக்கின்றன.

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் முன்பக்ககேமராவை பொறுத்தவரை - 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதுதவிர்த்து ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவு உடன் 5000mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

புதிய ஐக்யூ 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2K LTPO AMOLED டிஸ்பிளே, தற்போதைக்கு குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப், 12ஜிபி வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜ்-ஐ கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் மூன்று 50எம்பி கேமராக்கள் (ப்ரைமரி + அல்ட்ரா வைட் + டெலிஃபோட்டோ), முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக இது 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவு உடனான சற்றே பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஐக்யூ குவெஸ்ட் டேஸ் சேல் 2025-ன் கீழ் வேறு என்னென்ன ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது?
ஐக்யூ இஸட்9எஸ் (iQOO Z9s): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9X 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐக்யூ இஸட்9 லைட் (iQOO Z9 Lite): இது ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro): இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 13 5G iQOO 12 5G Gets Discount in iQOO Quest Days Sale Until 2025 March 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X