Home
Mobile

iQOO-க்கு கும்பிடு.. ரூ.13,000 ரேட் கட்ல 120W சார்ஜிங்.. OIS கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஐக்யூ 13 (iQOO 13) போனின் புதிய கலர் வேரியண்ட் வெளியாக இருப்பதை முன்னிட்டு முந்தைய மாடலான ஐக்யூ 12 (iQOO 12) போனுக்கு ரூ.13,000 நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, 16 ரேம், அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 100X டிஜிட்டல் ஜூம், 64 எம்பி டெலிபோட்டோ போன்ற பீச்சர்களில் இந்த ஐக்யூ 12 போன் பட்டையை கிளப்புகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஐக்யூ 12 போனானது, இந்தியாவில் வெளியாகியபோது, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.57,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.44,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது ரூ.13,000 விலை குறைப்பில் கிடைப்பதாகும். இதுபோக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளும் கிடைக்கின்றன.

iQOO-க்கு கும்பிடு.. ரூ.13,000 ரேட் கட்ல 120W சார்ஜிங்.. OIS கேமரா!

லெஜண்ட் (Legend) மற்றும் ஆல்பா (Alpha) ஆகிய கலர் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் லெஜண்ட் வேரியண்ட் ஒயிட் கலரிலும் மற்றும் ஆல்பா வேரியண்ட் கிரே கலரிலும் கிடைக்கிறது. மோட்டோஸ்போர்ட் டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. மெட்டாலிக் மிடில் ஃபிரேம் எதிர்பார்க்கலாம். கேமிங்குக்காக பிளாட் டிஸ்பிளே டிசைனில் கிடைக்கிறது.

ஐக்யூ 12 அம்சங்கள் (iQOO 12 Specifications): இந்த ஐக்யூவில் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. டெலிபோட்டோவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 100X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது.

மெயின் கேமராவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50எச் (Omnivision OV50H) சென்சார் கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாரை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரியர் கேமரா சிஸ்டம், பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இருப்பது தெரிகிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது.

iQOO-க்கு கும்பிடு.. ரூ.13,000 ரேட் கட்ல 120W சார்ஜிங்.. OIS கேமரா!

இந்த ஐக்யூவில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டிஸ்பிளேவில் கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்க முடியும். ஏனென்றால், 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) எல்பிடிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.

மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1400 நிட்ஸ் எச்பிஎம் மோட் (HBM Mode) கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சியும் இதில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது.

இதற்கு ஆரம்பத்தில் 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படும் என்று ஐக்யூ இந்தியா அறிவித்தது. 120W ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. IP64 ரேட்டிங் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 With 50MP Camera Sale Under Rs 45000 Ahead iQOO 13 New Color Variant Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X