Home
Mobile

மார்கெட் மிரளும்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. OLED டிஸ்பிளே.. 100X ஜூமிங்.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும் விதமாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 100X டிஜிட்டல் ஜூமிங் கேமரா, 24ஜிபி ரேம், 1டிபி மெமரி, ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஐக்யூ 12 சீரிஸ் (iQoo 12 Series) போன்கள் வெளியாக இருக்கிறது.

ஐக்யூ 12, 12 ப்ரோ அம்சங்கள் (iQoo 12, 12 Pro Specifications): இந்த ஐக்யூ 12 போன் 6.78 இன்ச் பிஓஈ ஓஎல்இடி (BOE OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.

மார்கெட் காலி.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 100X ஜூமிங்.. 120W சார்ஜிங்!

அதேபோல ஐக்யூ 12 ப்ரோ மாடலில் சாம்சங் ஈ7 அமோலெட் (Samsung E7 AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2K ரெசொலூஷன், 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1440Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

இந்த போன்களில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஓர்ஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் (Triple Rear Camera Unit) கொண்டுள்ளன.

இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும். அந்த வகையில், ஓம்னிவிஷன் ஓவி50எச் (OmniVision OV50H) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஓவி64பி (OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 100X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மார்கெட் காலி.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 100X ஜூமிங்.. 120W சார்ஜிங்!

அதே போல 16 செல்பீ கேமரா வருகிறது. இந்த போன்களில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் ( in-display Fingerprint Scanner) வருகிறது. ஐக்யூ 12 ப்ரோ மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. அதேபோல 12 மாடலில் IP64 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 2 போன்களிலும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை 7 (Wi-Fi 7) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. ஐக்யூ 12 ப்ரோ மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,100mAh பேட்டரி வருகிறது. அதேபோல ஐக்யூ 12 மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்களில் கேமிங் பிரியர்களை கவரும் வகையில், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), 4டி வைப்ரேஷன் (4D Vibration), எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) ஆகிய பீச்சர்கள் வருகின்றன. இந்த ஐக்யூ 12 மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் வருகின்றன. அதோடு 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ப்ரோ மாடலில் 16 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கின்றன. இந்த போனின் ஆரம்ப விலையே ரூ.45,000 முதல் ரூ.45,999 வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கூறிய அம்சங்கள் ஸ்மார்ட்போன் வட்டாரங்களில் கசிந்தவையாகும்.

மார்கெட் காலி.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 100X ஜூமிங்.. 120W சார்ஜிங்!

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த போன்கள் வரும் நவம்பர் 7ஆம் தேதி சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகின்றன. அதன்பின் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாகிறது. மிகப்பெரும் கேமரா, பேட்டரி மற்றும் சிப் சிஸ்டம் மற்றும் அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்டிருப்பதால், இந்த ஐக்யூ 12 மாடல்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo 12 With 12GB RAM, Snapdragon8 Gen 3 Launch on November 7 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X