மிரளுது ப்ரீ-ஆர்டர்.. OIS கேமரா.. 100X ஜூமிங்.. 120W சார்ஜிங்.. QUAD டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் அதிரும் விதமாக 16ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 64எம்பி டெலிபோட்டோ கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ 12 மற்றும் 12 ப்ரோ போன்களின் ப்ரீ-ஆர்டர் சாதனை படைத்துள்ளது.
முன்னதாக வெளியான ஐக்யூ 11 (iQOO 11) மாடல்களின் முதல் நாள் விற்பனையை வெறும் 1 மணி நேரத்தில் முறியடித்துள்ளது. இந்த போன்களில் அப்படியென்ன இருக்கிறது? விலை எப்படி? இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஐக்யூ 12, 12 ப்ரோ அம்சங்கள் (iQoo 12, 12 Pro Specifications): ஐக்யூ 12 போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10 பிளஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.
ஐக்யூ 12 ப்ரோ போனில் 6.78 இன்ச் குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1440Hz PWM டிம்மிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 2 மாடல்களிலும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 (Adreno 750 GPU) ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 4.0 வருகிறது.

இந்த ஐக்யூ 12 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றன. அதேபோல ப்ரோ போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.
அதோடு 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் இருக்கின்றன. டூயல் நானோ சிம் சிலாட் மட்டும் வருகிறது. இந்த 2 போன்களிலும் ஒரே மாதிரியான ரியர் கேமரா சிஸ்டம் (Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா ஓம்னிவிஷன் ஓவி50எச் சென்சாருடன் வருகிறது. அதேபோல சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சாருடன் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் 100X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ப்ரோ மாடலில் மட்டும் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐக்யூ 12 மாடலில் 5000mAh பேட்டரியும், ப்ரோ மாடலில் 5100mAh பேட்டரியும் வருகிறது. இரண்டிற்கும் 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்கள் வைட், ரெட் மற்றும் பிளாக் ஆகிய மூன்று கலர்களில் மார்கெட்டுக்கு வருகின்றன. ஐக்யூ 12 மாடலில் ஆரம்ப விலை ரூ.45,715ஆகவும், ஐக்யூ 12 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.58,045ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








