மார்கெட் பிச்சிக்குது.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 100X ஜூமிங்.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை அதிரவிடும் விதமாக 16ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 64 எம்பி டெலிபோட்டோ கேமரா, 120W ஃபிளாஷ் சார்ஜிங் போன்ற உச்சகட்ட அம்சங்களுடன் ஐக்யூ 12 (iQoo 12) போன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐக்யூ 12 அம்சங்கள் (iQoo 12 Specifications): இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபுயு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த மாடலில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதேபோல 1400 நிட்ஸ் எச்பிஎம் மோட் வருகிறது. அதோடு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த ஐக்யூ 12 போனில் கேமரா பிரியர்கள் மிரளும் விதமாக சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 50 எம்பி மெயின் கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி50எச் (OmniVision OV50H) சென்சாருடன் வருகிறது. அதேபோல சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாருடன் வருகிறது.
அதோடு எல்இடி பிளாஷ் வருகிறது. இந்த கேமராவில் 100x டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) மற்றும் வி3 இமெஜிங் சிப் (Imaging Chip) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த போனில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அதோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொண்டிருக்கிறது. இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மூன்று மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன.
இந்த ஐக்யூ 12 போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 120W அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த மாடலில் லெஜெண்ட் எடிஷன் வைட் (White), டிராக் எடிஷன் பிளாக் (Black) மற்றும் லெதர் எடிஷன் ரெட் (Red) ஆகிய மூன்று கலர்கள் வருகின்றன.
இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. அங்கு இதன் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.45,715ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.49,915ஆகவும், 16 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.56,560ஆகவும் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதே விலையில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. வரும் டிசம்பர் 12ஆம் தேதி இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








