பக்கா பிரீமியம்.. 5100எம்ஏஎச் பேட்டரி.. 6.78-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது ஐக்யூ போன்கள்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வரும் நவம்பர் 7-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த இரண்டு போன்களை அம்சங்களைப் பார்ப்போம். தற்போது வெளியான தகவலின்படி, ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5100 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் இ7 அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐக்யூ 12 ப்ரோ போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் தெரியவரும். மேலும் ஏற்கனவே கசிந்த ஐக்யூ 12 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஐக்யூ போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான 6.78-இன்ச் இ7 அமோஎல்இடி டிஸ்பிளேவை (6.78-inch E7 AMOLED Display) கொண்டு அறிமுகமாகும் இந்த அசத்தலான ஐக்யூ 12 போன். மேலும் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்ல கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
1டிபி ஸ்டோரேஜ் மற்றும் 24ஜிபி ரேம் வசதியுடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Ultrasonic in-Display Fingerprint Scanner) இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50-மெகாபிக்சல் (ஓவி50எச், ஓஐஎஸ்) + 50-மெகாபிக்சல் (ஜேஎன்1, அல்ட்ரா-வைட்) + 64-மெகாபிக்சல் (டெலிஃபோட்டோ) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (120W fast charging) கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஐக்யூ 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் வெளிவரும்.
குறிப்பாக ஐக்யூ 12 ப்ரோ மற்றும் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போன்களில் இருக்கும். குறிப்பாக இந்த ஐக்யூ 12 போன்கள் முதலில் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








