விஸ்வரூப புக்கிங்.. 9 மணி நேரத்தில் காலி.. இந்தியாவின் முதல் FASTEST போன்.. எந்த மாடல்?
இந்தியாவின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மாடலான ஐக்யூ 12 (iQoo 12) போனின் பீரியாரிட்டி பாஸ் வெறும் 9 மணி நேரங்களில் விற்று தீர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய வரவேற்பை பெற அந்த போனில் அப்படியென்ன இருக்கிறது?
வெகுசில ஆண்டுகளுக்கு முன்பெல்லால், ஸ்மார்ட்போன் என்றாலே, அதில் கேமரா எப்படி இருக்கிறது? என்பதை மட்டுமே பெரும்பாலானோர் கவனித்தனர். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. சிப்செட் எப்படி? பேட்டரி எப்படி? டிஸ்பிளே எப்படி? என்று மொத்தத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்தே ஸ்மார்ட்போன்களை வாங்கிவருகின்றனர்.

அப்படி, ப்ராசஸர் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட அதிவேக பர்ஃபாமென்ஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பிரீமியம் போன்களில் மட்டுமே கிடைத்துவந்தது. அதுவும்கூட இந்தியாவில் இதுவரை வெளியான எந்த போன்களிலும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் முதல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மாடலாக ஐக்யூ 12 போன் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.
இதனால், அந்த போனுக்கான வரவேற்பு எதிர்பாராத அளவுக்கு இருக்கிறது. ஏனென்றால், அந்த போனின் பீரியாரிட்டி பாஸ் விற்பனையை டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் செய்ய ஐக்யூ நிறுவனம் திட்டமிட்டு, அமேசான் மற்றும் ஐக்யூ தளங்களில் தொடங்கியது. ஆனால், இந்த பீரியாரிட்டி பாஸ் வெறும் 9 மணி நேரங்களில் முழுவதும் விற்று தீர்ந்து மார்கெட்டையே வியக்க வைத்துள்ளது.
இதற்கு காரணம் அந்த மாடலின் சிப்செட் மட்டுமல்ல. கேமரா, பேட்டரி, டிஸ்பிளே போன்ற அனைத்து அம்சங்களும் தான். இந்த நேரத்தில் ஐக்யூ 12 போனின் அம்சங்கள் (iQoo 12 Specifications) எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். இந்த போனில் 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற சப்போர்ட் வருவதால் பிரீமியம் வீடியோ குவாலிட்டி கொண்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.
ஓம்னிவிஷன் ஓவி50எச் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சாருடன் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
மிரட்டலாக 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. லெஜெண்ட் எடிஷன் வைட், டிராக் எடிஷன் பிளாக் மற்றும் லெதர் எடிஷன் ரெட் ஆகிய 3 கலர்கள் கொண்டிருக்கிறது.

இந்த ஐக்யூ 12 போனின் விலை விவரங்களை பார்க்கையில், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.45,715ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.49,915ஆகவும், 16 ஜிபி + 1 டிபி மாடலின் விலை ரூ.56,560ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சீனா மார்கெட் விலையாகும். இந்த விலையிலேயே இந்தியாவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
இருப்பினும், அது அறிமுக சலுகைகளுடன் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை குறைந்தது ரூ.50,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் அறிமுக சலுகை, பேங்க் ஆஃபர்கள் என்று ரூ.3,000க்கும் மேல் தள்ளுபடி கொடுக்கப்படும். இதைப்போலவே மற்ற வேரியண்ட்களின் விலையும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








