அடிச்சுகிட்டு உருளப்போகும் 2 சீன கம்பெனிகள்! அறிமுகமான மறுநாளே OnePlus 12-க்கு ஆப்பு வைத்த iQOO 12! என்ன விலை?
ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போன், சந்தேகத்திற்கு இடமின்றி நேற்று (டிச.5) அறிமுகமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் இவ்விரு மாடல்களுமே "கிட்டத்தட்ட" ஒரே மாதிரியான அம்சங்களை பேக் செய்கின்றன.
ஆக இவ்விரு மாடல்களில் எது மலிவான விலைக்கு வருகிறதோ அது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்கிற நிலைப்பாட்டில்.. அறிமுகமான மறுநாளே ஒன்பிளஸ் 12-க்கு ஆப்பு வைக்கும் தகவலொன்று வெளியாகியுள்ளது. டிச.12 ஆம் தேதி நடக்கும் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக ஐக்யூ 12-ன் விலை, அமேசான் வலைத்தளம் வழியாக "தற்செயலாக" பகிரப்பட்டுள்ளது.

பகிரப்பட்ட வேகத்தில் நீக்கப்பட்ட ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் நீக்கப்பட்டு விட்டாலும் கூட, டிப்ஸ்டர் சுதன்ஷு அம்போர் அதை ஸ்க்ரீன்ஷார்ட் ஆக பதிவு செய்துள்ளார். அதன்படி ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும்.
பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.52,999 க்கும், ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.57,999 க்கும் விற்கப்படும். ஐக்யூ 12 -ன் இந்த இந்திய விலை நிர்ணயங்கள் ஒன்பிளஸ் 12-ன் சீன விலைகளோடு ஒற்றுப்போகின்றன.

சீன சந்தையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (இந்திய ரூபாய் மதிப்பின்படி) தோராயமாக ரூ.50,600 க்கு அறிமுகமாகி உள்ளது. இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.56,500 க்கும், 16ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.62,400 க்கும் மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.68,200 க்கும் அறிமுகமாகியுள்ளது
நிச்சயமாக ஒன்பிளஸ் 12-ன் இந்திய விலை நிர்ணயமானது சீன விலையை விட அதிகமாகவே இருக்கும். ஆக எப்படி பார்த்தாலும் (இந்திய சந்தையில்) ஐக்யூ 12 ஆனது ஒன்பிளஸ் 12-ஐ விட மலிவாகவே இருக்கும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகம் முதல் ஸ்மார்ட்போன் ஐக்யூ 12 தான்!

இதே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 Chipset) தான் ஒன்பில்ஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ளது. ஆனால் இது இந்தியாவில் ஜனவரி மாதத்தின் இறுதியில் தான் (ஜன.23 அல்லது 24) அறிமுகமாகும். இதுவே ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனைக்கு ஒரு பின்னவடைவாக இருக்கலாம்.
ஐக்யூ 12 -க்கான முன்பதிவுகள் (Pre-order) ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஐக்யூ.காம் (iQOO.com) அல்லது அமேசான்.இந்த (Amazon.in) வழியாக ரூ.999 விலையுள்ள முன்னுரிமை பாஸை (Priority pass) வாங்குவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்பவர்கள், ரூ.2,999 மதிப்புள்ள விவோ டிடபுள்யூஎஸ் (Vivo TWS) இயர்பட்ஸ் உட்பட பல சிறப்பு பலன்களை பெறுவார்கள்.

ஐக்யூ 12 VS ஒன்பிளஸ் 12 அம்சங்கள்: ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் 2800 x 1260 பிக்சல் 1.5கே ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+ ஆதரவு உடனான 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிஸ்ப்ளேமேட் ஏ+ சான்றிதழ், டால்பி விஷன், 10 பிட் கலர் டெப்த், ப்ரோஎக்ஸ்டிஆர், 2160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் ரெயின் டச் ஆதரவு உடனான 6.82-இன்ச் QHD+ 2K OLED LTPO டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் மெயின் கேமராவும் கூடவே 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் OIS ஆதரவு உடன் 50எம்பி சோனி LYT-808 மெயின் கேமரா + 48எம்பி சோனி IMX581 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 3x டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64எம்பி OV64B பெரிஸ்கோப் கேமராக்கள் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனில் 120வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி உள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,400mAh பேட்டரி உள்ளது. இனிமேல் இந்த இரண்டில் எதை வாங்க வேண்டும் என்கிற முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும்!


Click it and Unblock the Notifications








