அவசரமா iQOO 12-ஐ ஆர்டர் போட்றாதீங்க.. OnePlus 12-ஐ பெருசா நம்பாதீங்க.. இந்த 2 போன்களும் வரட்டும்!
ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. இதுதான் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் இந்தியாவிற்கு வந்த முதல் ஸ்மார்ட்போனாகும். 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ள ஐக்யூ 12 5ஜி-யின் விற்பனை டிச.13 முதல் தொடங்குகிறது.
ஐக்யூ 12 5ஜி-யின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.52,999க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.57,999க்கும் வாங்க கிடைக்கும். இதற்கிடையில் கடந்த டிச.5-ல் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) 2024 ஜனவரி 24 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஐக்யூ 12-ஐ போலவே ஒன்பிளஸ் 12 மாடலும் கூட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது. அதுமட்டுமின்றி இதுவும் ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ளது. ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் 12-க்காக காத்திருந்தால் அல்லது ஐக்யூ 12-ஐ இன்றே ஆர்டர் போட திட்டமிட்டு இருந்தால்.. கொஞ்சம் பொறுங்கள்!
ஏனென்றால், இவ்விரு ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும் அளவிலான அம்சங்களை கொண்ட 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் "கூடிய விரைவில்" அறிமுகம் செய்யப்பட உள்ளது, அந்த போன்கள் அறிமுகமான பின்னர் எதை வாங்கலாம் என்கிற முடிவுக்கு வரலாம். அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். டிச.14 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகமாகவுள்ள இவ்விரு விவோ போன்களும் 2024 ஜனவரியில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது 2024 ஜன.14 இல் அறிமுகம் செய்யப்படலாம்.
அதாவது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கு முன்னதாகவே விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகிவிடும் என்பது போல் தெரிகிறது. ஆக ஐக்யூ 12 அல்லது ஒன்பிளஸ் 12 அல்லது விவோ எக்ஸ்100 சீரிஸ் - இவற்றில் எதை வாங்குவது என்கிற முடிவுக்கு வருவது அவ்வளவு கடினமான விஷயமாக இருக்க்காது!
விவோ எக்ஸ்100 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சீனாவில் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக) ரூ.50,000 க்கும், விவோ எக்ஸ்100 ப்ரோவின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.56,500 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதே விலையை இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் இது ரூ.60,000- ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஐக்யூ 12 மற்றும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்களுக்கு ப்ரோ மாடல் இருந்தால், அவைகளின் விலையும் கூட ரூ.70,000-ஐ தொடும் என்பதும் சந்தேகமே வேண்டாம்.
விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.78-இன்ச் அமோஎல்இடி 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், ஸெய்ஸ் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் மூன்று 50எம்பி கேமராக்கள், 32எம்பி செல்ஃபி கேமரா, ஐபி68 ரேட்டிங், 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.78-இன்ச் அமோஎல்இடி 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், ஸெய்ஸ் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் மூன்று 50எம்பி கேமராக்கள், 32எம்பி செல்ஃபி கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








