Home
Mobile

அதிரும் மார்க்கெட்.. 120W சார்ஜிங்.. 64எம்பி கேமரா.. அறிமுகமானது புதிய iQOO போன்கள்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் இன்று ஐக்யூ நியோ 12 மற்றும் ஐக்யூ நியோ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா மற்றும் அனைத்து நாடுகளிலும் இந்த இரண்டு போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 12 அம்சங்கள் (iQOO 12 specifications): ஐக்யூ நியோ 12 ஸ்மாார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5கே பிளாட் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2800 × 1260 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ளிட்ட பலவேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

64எம்பி கேமரா.. அறிமுகமானது புதிய iQOO போன்கள்.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 12 போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா (Omnivision OV50H sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (Samsung JN1 sensor) + 64எம்பி 3எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதுதவிர 100x டிஜிட்டல் ஜூம், ஏ3 இமேஜிங் சிப் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் ரியர் கேமரா.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஐக்யூ நியோ 12 ப்ரோ அம்சங்கள் (iQOO 12 Pro specifications): 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்ட் இ7 எல்டிபிஒ அமோலெட் (Quad HD+ curved E7 LTPO AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 12 ப்ரோ. பின்பு எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 1440ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (1440Hz PWM dimming) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அதேபோல் 5100 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 12 ப்ரோ போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 ரேட்டிங்கையும் (IP68 Rating) கொண்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனை (Dust and Water-resistant) கொண்டுள்ளது. மற்றபடி ஐக்யூ நியோ 12 போனில் இருக்கும் அனைத்து அம்சங்களும் ஐக்யூ நியோ 12 ப்ரோ போனில் உள்ளது.

64எம்பி கேமரா.. அறிமுகமானது புதிய iQOO போன்கள்.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 12 மற்றும் ஐக்யூ நியோ 12 ப்ரோ போன்கள் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்யூ நியோ 12 போனின் ஆரம்ப விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,715) ஆக உள்ளது. அதேபோல் ஐக்யூ நியோ 12 ப்ரோ போனின் ஆரம்ப விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.58,045) ஆக உள்ளது.

வரும் நவம்பர் 14-ம் தேதி இந்த போன்களை முன்பதிவு செய்ய முடியும். பின்பு வரும் நவம்பர் 24-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த அட்டகாசமான போன்கள். விரைவில் இந்த போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
IQOO 12, iQOO 12 Pro Launched With AMOLED Display : check price specifications, sale date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X