இந்த போன் வேற லெவல்ல இருக்குது.. 100W சார்ஜிங்.. 64MP கேமரா.. 24GB ரேம்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது ஆன்லைனில் கசிந்த தவலின்படி வரும் அக்டோபர் 24 அல்லது அக்டோபர் 26-ம் தேதி இந்த அட்டகாசமான ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தரமான சிப்செட், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐக்யூ 12 (iQOO 12) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் எந்த போனுக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே நாட்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் வரும் முதல் போன் என்ற பெருமையை ஐக்யூ 12 பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனால் இந்த போனுக்கு உடனே ஆண்ட்ராய்டு 14 (Android 14) அப்டேட் கிடைக்கும் என்று நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 512ஜிபி ரேம் +1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம். கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
50எம்பி OV50H பிரைமரி கேமரா + 50எம்பி ISOCELL JN1 அல்ட்ராவைடு லென்ஸ் + 64எம்பி டெலி போட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபொல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2K E7 AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பின்பு இந்த போனின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு சில நிமிடங்களில் இந்த போனை ஃபுல் சார்ஜ் செய்துவிட முடியும். ஆனால் இந்த போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








