Home
Mobile

வெயிட் பண்ணி வாங்குற அளவுக்கு 100% வொர்த்து.. Amazon-க்கு வந்த iQOO 12.. என்ன விலை? எப்போது விற்பனை?

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று, ஐக்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ஐக்யூ 12 சீரீஸ் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரீஸின் கீழ் ஐக்யூ 12 (iQoo 12) மற்றும் ஐக்யூ 12 ப்ரோ (iQoo 12 Pro) என் மொத்தம் 2 மாடல்கள் வெளியாகின.

இதற்கிடையில் பேஸிக் வேரியண்ட் (Basic Variant) ஆன ஐக்யூ 12 எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தேதி (India Launch Date) அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது வருகிற டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமாகும் மற்றும் இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனை செய்யப்படும்.

Amazon-க்கு வந்த iQOO 12.. என்ன விலை? எப்போது விற்பனை?

ஐக்யூ நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் (Microsite) தற்போது அமேசானின் இந்தியா தளத்தில் நேரலையில் உள்ளது. ஆக அறிமுகத்தை தொடர்ந்து (அடுத்த சில தினங்களில்) இது விற்பனைக்கும் வரலாம். ஐக்யூ 12 மாடலின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் பர்னிங் வே (Burning Way), லெஜண்ட் எடிஷன் (Legend Edition) மற்றும் டிராக் வெர்ஷன் (Track Version); அதாவது BMW மோட்டார்ஸ்போர்ட் ஃபினிஷ் போன்ற கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதே கலர்கள் வேறு பெயர்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Amazon-க்கு வந்த iQOO 12.. என்ன விலை? எப்போது விற்பனை?

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சீனாவில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.45,000 க்கும், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் மற்றும் 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே (சுமார்) ரூ 50,000 க்கும் மாற்று ரூ.53,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்ற விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

அம்சங்களை பொறுத்தவரை, ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது, இது 1.5கே (1260 x 2800 பிக்சல்ஸ்), 144 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh rate) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) ஆதரவுடன் 20:9 என்கிற ரேஷியோவுடன் வருகிறது.

Amazon-க்கு வந்த iQOO 12.. என்ன விலை? எப்போது விற்பனை?

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Octa-core 4nm Snapdragon 8 Gen 3 SoC) உடனாக அட்ரினோ 750 ஜிபியு ( Adreno 750 GPU) மூலம் இயக்கப்படுகிறது. ஐக்யூவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) கொண்டு இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் (Triple rear camera unit) உள்ளது, அதில் 50 மெகாபிக்சல் 1/1.3-இன்ச் மெயின் சென்சார் + 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (100x Digital Zoom) கொண்ட 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ (Periscope telephoto ) கேமரா + அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது'.

கடைசியாக ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது 120வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (120W fast charging support) உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 163.22mm x 75.88mm x 8.10mm அளவும், எடையில் 203 கிராமும் உள்ளது.

ஐக்யூ 12 சீரீஸின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன ஐக்யூ 12 ப்ரோ மாடல் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவலை ஐக்யூ நிறுவனம் இன்னும் பகிரவில்லை. இது நிச்சயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எப்போது என்கிற தேதி அறிவிக்கப்பட்டதும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 India Launch Date December 12 Specifications Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X