Home
Mobile

யோசிக்காம வாங்கலாம்.. 120W சார்ஜிங்.. 64எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. வருகிறது புது ஐக்யூ போன்.. எந்த மாடல்?

வரும் நவம்பர் 7-ம் தேதி ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது ஐக்யூ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய போன்கள் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது இது குறித்து விரிவான தகவலைப் பார்ப்போம்.

 64எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. வருகிறது புது ஐக்யூ போன்.. எந்த மாடல்?

குறிப்பாக ஆன்லைனில் வெளியான புகைப்படத்தில் இந்த ஐக்யூ 12 (iQOO 12) போனின் பின்புற கேமரா சற்று வித்தியாசமாக இருக்கிறது. பின்பு வெள்ளை நிறத்திலும் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான 6.78-இன்ச் இ7 அமோஎல்இடி டிஸ்பிளேவை (6.78-inch E7 AMOLED Display) கொண்டு அறிமுகமாகும் இந்த அசத்தலான ஐக்யூ 12 போன்.

மேலும் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்ல கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஐக்யூ போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

24ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Ultrasonic in-Display Fingerprint Scanner) இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50-மெகாபிக்சல் (ஓவி50எச், ஓஐஎஸ்) + 50-மெகாபிக்சல் (ஜேஎன்1, அல்ட்ரா-வைட்) + 64-மெகாபிக்சல் (டெலிஃபோட்டோ) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (120W fast charging) கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஐக்யூ 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் இந்த பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 64எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. வருகிறது புது ஐக்யூ போன்.. எந்த மாடல்?

5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்யப்படும். பின்பு விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

அதேபோல் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போனும் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் அட்டகாசமான கேமரா வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த இரண்டு போன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 images leaked online: check release date, price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X