யாரு சாமி அவன்.. OIS கேமரா.. 100X ஜூமிங்.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஆல்பா (Alpha), லெஜண்ட் (Legend) வேரியண்ட்களில் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்ட ஐக்யூ 12 (iQOO 12) போனின் டெசர்ட் ரெட் அனிவர்சரி எடிஷன் (Desert Red Anniversary Edition) வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. வேகன் லெதர் பேனலில் மார்கெட்டை அதிரவிட்டுள்ளது.
இந்தியாவில் 4ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக, இந்த டெசர்ட் ரெட் அனிவர்சரி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது ஐக்யூ நிறுவனம். ஓம்னிவிஷன் கேமரா, 100X ஜூம், 12 ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் என்று பீச்சர்களில் பின்னியெடுக்கும் இந்த போனுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஐக்யூ 12 அம்சங்கள் (iQOO 12 Specifications): இந்த ஐக்யூ மாடலில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) பிளாட் எல்டிபிஓ அமோலெட் (Flat LTPO AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்பிஎம் மோட் (HBM Mode வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே குவாலிட்டியை இந்த போனில் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவை போலவே கேமரா சிஸ்டமும் பிரீமியம் சென்சார்களுடன் இருக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50எச் (Omnivision OV50H) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் சப்போர்ட் உள்ளது.
அதேபோல 64 எம்பி டெலிபோட்டோ கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3X Optical Zoom) மற்றும் 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (100X Digital Zoom) சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 8கே வீடியோ ரெக்கார்டிங் (8K Video Recording) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

16 எம்பி செல்பீ ஷூட்டரில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. ஆகவே, இந்த ஐக்யூ 12 போனின் கேமரா பர்ஃபாமென்ஸ் அல்ட்ரா அவுட்புட் கொடுக்கும். ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடையாது. இந்த போனின் பேட்டரி சிஸ்டம், ஐக்யூ மாடல்களிலேயே அதிகப்படியாக 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் (Ultra-fast Flash Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.
ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் உள்ளது. 8.1 மிமீ தடிமன் மற்றும் 203.9 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.52,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.57,999ஆகவும் இருக்கிறது. எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
அதோடு 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த போனை அமேசான் (Amazon) மற்றும் ஐக்யூ இந்தியா (iQOO India) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் விற்பனை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பக்கா பிரீமியம் போன் மிட்-பிரீமியம் பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications