Home
Mobile

நவம்பர் 7 வரைக்கும் எந்த போனும் வாங்கிடாதீங்க.. வெயிட் பண்ணி இந்த 2 போன்ல 1 வாங்குங்க!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ( Snapdragon 8 Gen 3 Chipset) உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் எது? என்கிற போட்டி வேற லெவலில் சூடு பிடித்துள்ளது. அந்த போட்டியில் ஷாவ்மீ தான் வெற்றி அடையும் என்பது "கிட்டத்தட்ட" உறுதியாகிவிட்டது.

ஏனென்றால் ஷாவ்மீ 14 சீரீஸ், இந்த அக்டோபர் மாதமே சீனாவில் அறிமுகமாகும் என்பதை ஷாவ்மீ உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீரீஸின்கீழ் அறிமுகமாகும் ஷாவ்மீ 14 (Xiaomi 14) மற்றும் ஷாவ்மீ 14 ப்ரோ (Xiaomi 14 Pro) ஆகிய இரண்டுமே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கப்போகின்றன.

நவம்பர் 7 வரைக்கும் வெயிட் பண்ணி இந்த 2 போன்ல 1 வாங்குங்க!

அதற்கு அடுத்தபடியாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யப்போவது மற்றொரு சீன மொபைல் நிறுவனமான ஐக்யூ தான். இந்நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களான ஐக்யூ 12 (iQOO 12) மற்றும் ஐக்யூ 12 ப்ரோ (iQOO 12 Pro) ஆகிய இரண்டுமே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கூடவே பாண்டா இஸ் பால்ட் (Panda is Bald) என்கிற பெயருடைய டிப்ஸ்டர், ஐக்யூ 12 சீரிஸ் (iQOO 12 Series) ஸ்மார்ட்போன்களின் சாத்தியமான அறிமுக தேதியையும் வெளிப்படுத்தி உள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஐக்யூ 12 சீரீஸ் நவம்பர் 7 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படும்.

ஐக்யூ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ ஆகிய இரண்டுமே ஒரு மெட்டாலிக் ஃப்ரேமை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெண்ணிலா மாடலில் ஐபி64 டஸ்ட் / வாட்டர் ரெசிஸ்டன்ஸும் (IP64 Rating), ப்ரோ மாடலில் ஐபி68 டஸ்ட் / வாட்டர் ரெசிஸ்டன்ஸும் (IP68 Rating) இருக்கலாம்.

பிளாக், ஒயிட் மற்றும் ரெட் போன்ற கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ ஆகிய இரண்டுமே 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான 6.78-இன்ச் இ7 அமோஎல்இடி டிஸ்பிளேவை (6.78-inch E7 AMOLED Display) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறுபாடுகளை பொறுத்தவரை வெண்ணிலா மாடலில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உடன் கூடிய பிளாட்-ஸ்கிரீன் (Flat Screen) மற்றும் ஆப்டிகல் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Optical in-screen Fingerprint Sensor) இடம்பெறலாம். மறுகையில் உள்ள ப்ரோ மாடலில் 2கே ரெசல்யூஷன் (2K Resolution) உடன் கூடிய கர்வ்டு-எட்ஜ் டிஸ்பிளே (Curved Edge Display) மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Ultrasonic in-Display Fingerprint Scanner) இடம்பெறலாம்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஆர்ஜின்ஓஎஸ்4 (OriginOS 4) கொண்டு இயங்கும் இவ்விரு ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவுள்ள இன்னொரு பொதுவான அம்சம் (முன்னரே குறிப்பிட்டபடி) ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் தான். மேலும் இந்த சீரிஸில் 24ஜிபி வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 1 டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வரலாம்.

மேலும் இரண்டு போன்களிலும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா (16MP Selfie Camera) இருக்கும். வேறுபாடுகளை பொறுத்தவரை ஐக்யூ 12 மாடலில் 50-மெகாபிக்சல் (ஓவி50எச், ஓஐஎஸ்) + 50-மெகாபிக்சல் (ஜேஎன்1, அல்ட்ரா-வைட்) + 64-மெகாபிக்சல் (டெலிஃபோட்டோ) ட்ரிபிள் கேமரா யூனிட் மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்

மறுகையில் உள்ள ஐக்யூ 12 ப்ரோவில் மெயின் கேமரா, அல்ட்ரா-வைட் கேமரா இருக்கும். கூடவே 64-மெகாபிக்சல் ஓவி64பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா (64MP OV64B Periscope Telephoto Camera) இடம்பெறலாம். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5100mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 and iQOO 12 Pro Snapdragon 8 Gen 3 Chipset Launch Date November 7 Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X