Home
Mobile

பொளந்து கட்டுது கேமரா.. OV சென்சார்.. 64MP டெலி.. 100X ஜூமிங்.. V3 சிப்.. எந்த மாடல்?

இந்திய கேமரா பிரியர்களுக்காவே மிரட்டலாக வெளியாக இருக்கும் ஐக்யூ 12 (iQoo 12) போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொடுக்கப்படுகிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி, விற்பனை மற்றும் விலை விவரங்கள் இதோ.

இந்தியாவில் பல பேருக்கு ஸ்மார்ட்போன் என்றாலே, கேமரா மட்டுமே முதலில் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு கேமரா பிரியர்கள் இங்கு அதிகமாக இருக்கின்றனர். இவர்களை தட்டித்தூக்கும் விதமாக ஐக்யூ நிறுவனம் ஓம்னிவிஷன் மற்றும் சாம்சங் சென்சார்கள், 100X ஜூமிங் சப்போர்ட் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஐக்யூ 12 போனை வரும் டிசம்பர் 12ஆம் தேதி களமிறக்குகிறது.

பொளந்து கட்டுது.. OV கேமரா.. 64MP டெலி.. 100X ஜூமிங்.. V3 சிப் போன்!

இந்த போனின் கேமரா மட்டுமல்லாமல் மற்ற அம்சங்களும் பிரம்மாண்டமாகவே இருக்கின்றன. அதிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 அம்சங்கள் அந்த போன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்போது, அதன் முழு அம்சங்களை பார்ப்போம்.

ஐக்யூ 12 அம்சங்கள் (iQoo 12 Specifications): இந்த போனில் ஓம்னிவிஷன் ஓவி50எச் (OmniVision OV50H) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அதேபோல ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாருடன் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் வி3 இமெஜிங் சிப் (V3 Imaging Chip) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிப் 4K வீடியோக்களை கிரிஸ்டல் கிளியராக கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதோடு 100x டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom)
சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

பொளந்து கட்டுது.. OV கேமரா.. 64MP டெலி.. 100X ஜூமிங்.. V3 சிப் போன்!

இந்த ஐக்யூ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் சிப்செட் வருகிறது. 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.5K ரெசொலூஷன் வருகிறது. அதோடு எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இடம்பெற்றுள்ளன. அதேபோல இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் வருகின்றன. இந்த போனில் 120W அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் வருகிறது.

இந்த மாடலில் லெஜெண்ட் எடிஷன் வைட் (Legend Edition White), டிராக் எடிஷன் பிளாக் (Track Edition Black) மற்றும் லெதர் எடிஷன் ரெட் (Leather Edition Red) ஆகிய மூன்று கலர்கள் கிடைக்கின்றன. சீனாவில் இந்த போனின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.45,715ஆக இருக்கிறது.

பொளந்து கட்டுது.. OV கேமரா.. 64MP டெலி.. 100X ஜூமிங்.. V3 சிப் போன்!

அதேபோல 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.49,915ஆகவும், 16 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.56,560ஆகவும் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வெளியீட்டை முன்னிட்டு ஒவ்வொரு அம்சங்களாக ஐக்யூ நிறுவனம் உறுதி செய்து வருகிறது.

Best Mobiles in India

English summary
iQoo 12 5G With Android 14 Based Funtouch OS 14 Launch in India on December 12 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X