Home
Mobile

iQOO 12 5G Review: நம்பி வாங்க 4 நல்ல காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 நியாயமான காரணங்கள்!

ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) - சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாகும். மேலும் 2024 ஜன.23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான போட்டியாளரும் கூட!

இருப்பினும் கூட ஐக்யூ 12-ஐ நம்பி வாங்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் / தயக்கம் உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துளீர்கள். ஐக்யூ 12-ஐ ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 4 நல்ல காரணங்களும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 2 நியாயமான காரணங்களும் இதோ:

iQOO 12 5G: நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்!

நம்பி வாங்க.. முதல் காரணம்: சந்தேகத்திற்கு இடமின்றி ஐக்யூ 12 5ஜி-ல் உள்ள ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் டாப்-நாட்ச் பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. மேலும் இது 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது மென்மையான மல்டி-டாஸ்கிங், லேக்-ஃப்ரீ கேமிங் மற்றும் வேகமான ஆப் லோட் டைமை வழங்குகிறது. மேலும் நீங்கள் 4கே வீடியோக்களை எடிட் செய்தாலும் கூட அல்லது பிஜிஎம்ஐ (BGMI) போன்ற ஹெவி கேம்களை விளையாடினாலும் கூட ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

iQOO 12 5G: நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்!

நம்பி வாங்க.. இரண்டாவது காரணம்: எந்த ஸ்மார்ட்போனிலும் நாம் பார்க்காத அளவிற்கு, மிகவும் துடிப்பான மற்றும் அதிவேகமான அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது. மென்மையான விஷுவல்ஸ் மற்றும் ஸ்க்ரோலிங்கிற்காக இது 144ஹெர்ட்ஸ் ஹை ரெஃப்ரெஷ் ரேட்டை (144Hz high refresh rate) கொண்டுள்ளது.

கூடவே ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது எச்டிஆர்10 ஆதரவையும் (HDR10 support) பெற்றுள்ளது. கடைசியாக இந்த டிஸ்பிளே கடுமையான சூரிய வெளிச்சத்தின்கீழ் கூட பிரகாசமான டிஸ்பிளேவை காட்ட உதவும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness) உடன் வருகிறது.

iQOO 12 5G: நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்!

நம்பி வாங்க.. மூன்றாவது காரணம்: வெறும் 30 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் 120W ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த அளவிற்கு வேகமான சார்ஜிங்கை வழங்குவதால், உங்களுடைய ப்ரொடெக்டிவிட்டி ஒருபோதும் குறையாது; முக்கியமாக உங்களுக்கு பவர் பேங்க் தேவைப்படாது.

நம்பி வாங்க.. நான்காவது காரணம்: இந்த ஸ்மார்ட்போனை ஒரு "கேமரா கிங்" என்றே கூறலாம். ஐக்யூ 12-ன் கேமரா செட்டப் மிருதுவான புகைப்படங்கள் மற்றும் மென்மையான வீடியோக்களை படம்பிடிக்கிறது. 50எம்பி ப்ரைமரி கேமரா நல்ல வெளிச்சத்தில் அட்டகாசமான போட்டோக்களை வழங்குகிறது. நைட் மோடிலும் (Night Mode) கூட சில நல்ல அவுட்புட்களை காண முடிகிறது.

வாங்காமல் தவிர்க்க.. முதல் காரணம்: ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனில் ​வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு இல்லை. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கே போதும் என்கிறவர்களுக்கு நிச்சயம் இதுவொரு பெரிய குறையாக தெரியாது. ஆனால் ஒன்பிளஸ் 12-ல் 50W வயர்லெஸ் சார்ஜிங் இருப்பதை குறிப்பிடும் பட்சத்தில், நிச்சயம் இதுவொரு குறைதான்!

வாங்காமல் தவிர்க்க.. இரண்டாவது காரணம்: ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள செல்பீ கேமராவனது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கிற்கான ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பேக் செய்யப்பட்டுள்ள ஹார்ட்வேரை வைத்து பார்க்கும்போது, இதன் செல்பீ கேமராவில் மிகவும் எளிமையாக 4கே வீடியோ பதிவை சேர்க்க முடியும். ஆனால் சேர்க்கப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக, ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் - சக்திவாய்ந்த, பிரீமியம் அம்சங்கள்நிறைந்த ரூ ஸ்மார்ட்போனாகும். குறிப்பாக இதன் விலையை கருத்தில் கொண்டால்.. நிச்சயம் இதுவொரு பெஸ்ட் ஸ்மார்ட்போன் தான். அட்டகாசமான செயல்திறன், பிரமாதமான டிஸ்பிளே குவாலிட்டி, வேகமான சார்ஜிங்கிற்கு முன்னுரிமை அளிப்பவர்கள், இந்த ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்1

ஐக்யூ 12 5ஜி விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 52,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.57,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டுமே லெஜெண்ட் மற்றும் ஆல்ஃபா கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 5G Review in 6 Points 4 Reasons to Buy 2 Reasons to Avoid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X