விஸ்வரூப ப்ரீ-புக்கிங்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 120W சார்ஜிங்.. OV கேமரா.. 100x ஜூமிங்.. எந்த மாடல்?
இந்திய கேமரா பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் வைத்திருந்த ஐக்யூ 12 (iQoo 12) போனின் ப்ரீ-புக்கிங் தொடங்கி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ப்ரீ-புக்கிங் பாஸ் வைத்திருப்போருக்கு ரூ.2,999 மதிப்புள்ள விவோ இயர்பட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
ஐக்யூ 12 அம்சங்கள் (iQoo 12 Specifications): இந்த ஐக்யூ போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 2160Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த ஐக்யூ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் பக்கா சென்சார்கள் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
ஆகவே, ஓம்னிவிஷன் ஓவி50எச் (OmniVision OV50H) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் வி3 இமெஜிங் சிப் (V3 Imaging Chip), 4K வீடியோ ரெக்கார்டிங், 100x டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) உள்ளிட்ட சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வருகின்றன.

இந்த ஐக்யூ 12 போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இடம்பெற்றுள்ளது. இந்த போனில் லெஜெண்ட் எடிஷன் வைட், டிராக் எடிஷன் பிளாக் மற்றும் லெதர் எடிஷன் ரெட் ஆகிய மூன்று கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
இந்த போன் வரும் டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனுக்கு பிரம்மாண்ட வரவேற்பை ஏற்படுத்த ஐக்யூ நிறுவனம், பல்வேறு சலுகைகளுடன் ப்ரீ-புக்கிங்கை திறந்துள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் ரூ 999 செலுத்தி இந்த போனை ப்ரீ-புக்கிங் செய்யலாம். இதன் மூலம் பீரியாரிட்டி பாஸ் (Priority Pass) பெற்றுகொள்ளலாம்.

இந்த பாஸ் வைத்திருப்பவர்களுக்கு ஐக்யூ 12 போனின் விற்பனை தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே ஆர்டர் செய்துகொள்ளும் சலுகை வழங்கப்படுகிறது. அதோடு ரூ 2999 மதிப்புள்ள விவோ TWS இயர்பட்ஸ் ப்ரீயாக வழங்கப்படுகிறது. இந்த ப்ரீ-புக்கிங் தொகை திரும்ப பெற்றுக்கொள்ளும் தொகையாகும்.
இந்த போன் சீனாவில் வெளியாகிவிட்டது. அங்கு இந்த போனின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.45,715ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.49,915ஆகவும், 16 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.56,560ஆகவும் இருக்கிறது. இந்த விலையிலேயே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








