Home
Mobile

முன்பதிவு செய்ய ரெடியா..120W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 12-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பதிவு தேதி மற்றும் சிறப்புச் சலுகைகள் குறித்த தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போனை டிசம்பர் 5-ம் தேதி (நாளை) முதல் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான் மற்றும் ஐக்யூ.காம் தளங்களில் இந்த ஐக்யூ 12 5ஜி போனை முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு செய்ய ரெடியா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

அதேபோல் அமேசான் அல்லது ஐக்யூ.காம் வழியாக ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வதன் மூலம் ஐக்யூவின் ப்ரையாரிட்டி பாஸ்-ஐ பெறலாம் என்றும், இந்த பாஸ் 5 டிசம்பர் 2023 முதல் 7 டிசம்பர் 2023 வரை கிடைக்கும் என்றும் ஐக்யூ அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த பாஸின் விலை ரூ.999 ஆகும். இது திரும்பப்பெறக்கூடிய ஒரு தொகையாகும். அதாவது இந்த தொகை ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை வாங்கும் இறுதி கட்டணத்தில் கழித்துக்கொள்ளப்படும்.

குறிப்பாக ப்ரையாரிட்டி பாஸ்-ஐ வைத்திருக்கும் பயனர்களுக்கு ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்வதற்கான ஆரம்ப அணுகலும் கிடைக்கும். இதன்கீழ் பொது விற்பனைக்கான 24 மணி நேரத்திற்கு முன்பே உங்களால் இந்த போனை ஆர்டர் செய்ய முடியும். இதுதவிர ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனுடன் ரூ.2999 மதிப்புள்ள விவோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்ற வெளியீட்டுச் சலுகைகள் வரும் டிசம்பர் 12-ம் தேதி தெரியவரும். இப்போது ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 6.78-இன்ச் 1.5கே பிளாட் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன். 2800 × 1260 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ளிட்ட பலவேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது ஐக்யூ 12 போன்.மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட். பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு அட்டகாசமாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 12 5ஜி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டு இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும். கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களில் இந்த அசத்தலான ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 50எம்பி மெயின் கேமரா (Omnivision OV50H sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (Samsung JN1 sensor) + 64எம்பி 3எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது இதுதவிர 100x டிஜிட்டல் ஜூம், ஏ3 இமேஜிங் சிப் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் ரியர் கேமரா.

முன்பதிவு செய்ய ரெடியா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஐக்யூ 12 போனில் உள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டிஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.60,000- விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 5G pre-booking in India starts tomorrow: check specifications, price, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X