அதிரவிடும் பட்ஜெட். 120W சார்ஜிங்.. 64MP கேமரா.. 512GB மெமரி.. அறிமுகமானது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் இந்தியாவில் ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா, AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.
ஐக்யூ 12 5ஜி அம்சங்கள் (iQOO 12 specifications): 6.78-இன்ச் 1.5கே எல்டிபிஒ AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2800 × 1260 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ்,3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2160Hz PWM dimming உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் ஞ1 சிப்செட் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஐக்யூ 12 5ஜி போன் விற்பனைக்கு வரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சார்ந்த OriginOS 4.0 மூலம் இயங்குகிறது இந்த அசத்தலான ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
50எம்பி Omnivision OV50H பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் Samsung JN1சென்சார் + 64எம்பி 3x டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ 12 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர 100x டிஜிட்டல் ஜூம் ஆதரவு, V3 இமேஜிங் சிப் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4 வைஃபை 7,ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த புதிய ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ 12 5ஜி விலை (iQOO 12 price in India): 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 12 5ஜி போனின் விலை ரூ.52,999-ஆக உள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.57,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும்.
ஐக்யூவின் ப்ரையாரிட்டி பாஸ்-ஐ வைத்துள்ள பயனர்கள் டிசம்பர் 13 (இன்று) முதல் ஐக்யூ 12 5ஜி போனை வாங்கலாம். அதேபோல் இந்த போனின் ஒப்பன் சேல் வரும் டிசம்பர் 14-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஐக்யூ.காம் தளங்களில் இந்த போனை வாங்க முடியும்
.


Click it and Unblock the Notifications








