Home
Mobile

யோசிக்காம வாங்குவீங்க.. 64MP கேமரா.. ஆண்ட்ராய்டு 14.. 256GB மெமரி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் உடன் ஐக்யூ 12 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்யூ 12 5ஜி இயங்குதளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஐக்யூ 12 5ஜி போன் ஃபன்டச் ஒஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். பின்பு இந்த போனுக்கு மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என ஐக்யூ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யோசிக்காம வாங்குவீங்க.. 256GB மெமரி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

மேலும் இப்போது ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். ஐக்யூ 12 5ஜி ஸ்மாார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5கே பிளாட் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 2800 × 1260 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ளிட்ட பலவேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஐக்யூ 12 போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனேவ இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட். பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி இந்த போனில் உள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டு இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும். கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களில் இந்த அசத்தலான ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

50எம்பி மெயின் கேமரா (Omnivision OV50H sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (Samsung JN1 sensor) + 64எம்பி 3எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதுதவிர 100x டிஜிட்டல் ஜூம், ஏ3 இமேஜிங் சிப் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் ரியர் கேமரா.

 யோசிக்காம வாங்குவீங்க.. 256GB மெமரி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஐக்யூ 12 போனில் உள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்இ 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக ஐக்யூ 12 போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo 12 5G in India will get three years of OS updates: check launch date, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X