ஆஹா எதை வாங்குறது.. பழைய iQOO 5G போன் மீது ரூ.11,000 விலை குறைப்பு.. வரிசையாக வரும் 4 புது மாடல்கள்!
ஐக்யூ (iQOO) நிறுவனம் வருகிற ஏப்ரல் 2025 இல் பல புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 11 ஆம் தேதியன்று, இந்திய சந்தையில் அறிமுகமாகும் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனும் அடங்கும். இது 7,300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதை தொடர்ந்து இதே ஐக்யூ இஸட்10 சீரீஸின் கீழ் ஐக்யூ இஸட்10எக்ஸ், ஐக்யூ இஸட்10 டர்போ, ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஆகிய மாடல்கள்.. 7000mAh அல்லது 7000mAh க்கும் மேலான பேட்டரி கெப்பாசிட்டி உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஐக்யூ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றானது ரூ.11,000 விலைகுறைக்கப்பட்டுள்ளது.

அது ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆகும். ரூ.52,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது இப்போது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக மிகப்பெரிய தள்ளுபடி விலையின்கீழ் வாங்க கிடைக்கிறது. அமேசானில் தற்போது இது ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது அசல் விலையை விட ரூ.11,000 குறைவாகும்.
சற்றே பழைய ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? ஐக்யூ 12 5ஜி-ல் உள்ள ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ஆனது இப்போதும் டாப்-நாட்ச் பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஒரு சிப்செட் ஆகும். இது மென்மையான மல்டி-டாஸ்கிங், லேக்-ஃப்ரீ கேமிங் மற்றும் வேகமான ஆப் லோட் டைமை வழங்குகிறது.
கூடவே இது அதிவேகமான 144ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது எச்டிஆர்10 ஆதரவையும் பெற்றுள்ளது. கடுமையான சூரிய வெளிச்சத்தின்கீழ் கூட பிரகாசமான டிஸ்பிளேவை காட்ட உதவும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. மேலும் இது வெறும் 30 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் 120W ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.
எல்லாவற்றை விட முக்கியமான இது நல்ல கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதன் 50எம்பி ப்ரைமரி கேமரா நல்ல வெளிச்சத்தில் அட்டகாசமான போட்டோக்களை வழங்குகிறது. நைட் மோடிலும் சில நல்ல அவுட்புட்களை காண முடிகிறது. குறைகளை பற்றி பேசும்போது இதில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு இல்லை மற்றும் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள செல்பீ கேமராவனது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கிற்கான ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது.
ஏப்.11 இந்தியாவில் அறிமுகமாகும் ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- 7,300mAh பேட்டரி
- 7.89 மிமீ ஸ்லிம் டிசைன்
- 6.67-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 அல்லது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்
- 32MP செல்பீ கேமரா
- விலை ரூ.24,990 ஆக இருக்கலாம்.
ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- LTPS பேக்லைட்டிங் உடன் கூடிய 6.78-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- பிளாஸ்டிக் மிட்-ஃபிரேம் டிசைன்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்
- அட்ரினோ 825 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 12ஜிபி ரேம்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 7000mAh பேட்டரி
- ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.44,990 ஆக இருக்கலாம்
ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- 1.5K ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன்னரே குறிப்பிட்டபடி 7000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.50,000 க்குள் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








