iQOO 12-க்கு அடிச்சது லக்கு.. 4 வருசம் இல்ல.. இனிமே 5 வருசம்.. இதுபோக 4 ஓஎஸ் அப்டேட்.. உறுதி செய்த ஐக்யூ!
ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) போன் பிரியர்களுக்கு லக்குதான் போல என்று சொல்லும்படி ஓஸ் (OS) மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கூடுதலாக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே, பீச்சர்களில் பின்னியெடுக்கும் இந்த போனுக்கு ஓஎஸ் அப்டேட்கள் ஆப்பிள், சாம்சங் மாடல்களுக்கு நிகராக கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே, கிடைத்த ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் எப்படி? இந்த ஐக்யூ போனின் விலை எப்படி? பீச்சர்கள் என்னென்ன கிடைக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் செக்மெண்ட்டில் இந்த ஐக்யூ 12 5ஜி இந்திய மார்கெட்டில் வெளியானது. டிசம்பரில் விற்பனைக்கு வந்த இந்த போனுக்கு 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டன. இப்போது, இது ரிவைஸ்டு செய்யப்பட்டு, கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்க இருக்கிறது.

இந்த அப்டேட் 2027ஆம் ஆண்டு வரையில் கிடைக்கும். அதேபோல செக்யூரிட்டி அப்டேட்கள் 4 வருடத்தில் இருந்து 5 வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 18 ஓஎஸ் வரையில் அப்டேட் கிடைக்கும். ஐக்யூவின் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) இருக்கிறது. விலை, பீச்சர்கள் எப்படி?
இந்த ஐக்யூ 12 5ஜி போனின் மார்கெட் விலையை பார்க்கையில், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.57,999ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.43,999ஆகவும், 16 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.50,999ஆகவும் இருக்கிறது.
ஐக்யூ 12 5ஜி அம்சங்கள் (iQOO 12 5G Specifications): இந்த ஐக்யூ போனில் ஓம்னிவிஷன் ஓவி50எச் (Omnivision OV50H) சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியும் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதுபோக 8K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. மெயின் கேமராவுடன் 50 அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவை கொடுக்கிறது.
இந்த வைடு ஆங்கிளில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கிடைக்கிறது. மேலும், 64 எம்பி டெலிபோட்டோ கேமராவும் பேக் செய்கிறது. இந்த டெலிபோட்டோவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மட்டுமல்லாமல், 100X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது.
முன்பே சொன்னது போல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் இருக்கிறது. பிளாட் டிசைனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது.
கேமிங் பிரியர்களுக்கான 144Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் கிடைக்கிறது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த ஐக்யூ 12 5ஜி போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆனால், சில நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்த கொள்ளும்படி 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








